இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2.85 கோடி பேர் மீண்டனர் - 1,587 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 11வது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,97,62,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 89,977பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.93 சதவீதமாக இருக்கிறது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 1,587 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,83,490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.29 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைகளில் 7,98,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 73 நாட்களில் 8 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. நாடு முழுவதும் 26,89,60,399 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications