டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா வரும் ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. 5 இடங்களில் மக்கள் மீது சோதனை.. வேகம் எடுக்கும் கடைசி டெஸ்ட்!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்படும் கொரோனா வேக்சினை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் சோதனை செய்ய இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்படும் கொரோனா வேக்சினை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் சோதனை செய்ய இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க தீவிரமான போட்டி நடந்து வருகிறது. இந்த தீவிரமான போட்டியில் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கிறது.

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இதில் நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் வந்துள்ளது.

ரூ.7400 கோடி.. 30,000 பேருக்கு ஒரே அடியாக சோதனை.. அமெரிக்கா களமிறக்கும் வேக்சின்.. செம பிளான்!ரூ.7400 கோடி.. 30,000 பேருக்கு ஒரே அடியாக சோதனை.. அமெரிக்கா களமிறக்கும் வேக்சின்.. செம பிளான்!

வெற்றி

வெற்றி

ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால தற்போது கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் மிக முக்கியமான கட்டத்தில் மனித குலம் இருக்கிறது.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

இந்த ஆஸ்டெராசெனெகா நிறுவனம் தனது மருந்து உற்பத்திக்காக இந்தியாவை நாடி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது. வெறும் ஆயிரம் ரூபாய்க்கு இந்த மருந்தைய் விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் கண்டிப்பாக மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள்.

இறுதி சோதனை

இறுதி சோதனை

தற்போது இந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை தற்போது லண்டனில் நடந்து வருகிறது. 10 ஆயிரம் பேர் இதில் சோதனை செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் இந்த வேக்சின் சோதனையை செய்ய உள்ளனர். இதற்கான ஐந்து இடங்களை ஏற்கனவே மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை தேர்வு செய்துள்ளது.விரைவில் இங்கு மக்கள் மீது வேக்சினை சோதனை செய்ய உள்ளனர்.

Recommended Video

    Oxford vaccine மனித உடலில் இப்படி தான் வேலை செய்யும்
    ஏன் இந்தியா

    ஏன் இந்தியா

    இந்த மருந்து இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறுகிறார்கள். அதற்கு முன் இந்த மருந்தை 3 கட்ட சோதனை செய்ய வேண்டும். இந்திய மக்களிடம் மருந்தை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் மருந்தின் வீரியம், பயன் இந்தியர்கள் மீது எப்படி இருக்கிறது என்று தெரியும். விரைவில் விரிவாக இந்த சோதனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த மருந்து சோதனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Covid Vaccine: Serum institute will test the AZD1222 on Indians before manufacturing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X