டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுச் சொத்துக்கள் சேதம்... எங்கள் அரசுகள் செஞ்ச மாதிரி.. நாயை சுடுவது போல் சுடணும்.. பாஜக தலைவர்

Google Oneindia Tamil News

டெல்லி: பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் இருப்பதைப் போலவே நாயை சுடுவதை போல் சுடப்பட வேண்டும்" என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நடைபெற்ற சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க பாஜக தலைவரும் எம்பியுமான திலீப் கோஷ் முதல்முறையாக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் "கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை எதிர்ப்புச் சட்டத்தின் (சிஏஏ) போராட்டங்களின் போது ரயில்வே சொத்து மற்றும் பொது போக்குவரத்தின் சொத்துக்களை அழித்தவர்கள் மீது முதல்வர் மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடவில்லை. தடியடி நடத்த உத்தரவிடவில்லை?.

Recommended Video

    ஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது| Delhi police identifies masked woman

    குடந்தை பாலியல் வன்கொடுமை.. 4 பேருக்கு ஆயுள்.. பாதியில் இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை குடந்தை பாலியல் வன்கொடுமை.. 4 பேருக்கு ஆயுள்.. பாதியில் இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

    லத்தியால் அடிப்போம்

    லத்தியால் அடிப்போம்

    அவர்கள் அழிக்கும் பொது சொத்து யாருக்கு சொந்தமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்? அவர்களின் அப்பன் வீட்டு சொத்தா? பொது சொத்து.. வரி செலுத்துவோருக்கு சொந்தமானது ... நீங்க(அவர்கள்) இங்கு வருவீங்க. எங்கள் சோற்றை சாப்பிடுவீங்க.. இங்கேயே தங்கி பொது சொத்துக்களை சேதப்படுத்துவீங்க... நீங்கள் என்ன ஜமீன்தாரா? நாங்கள் சும்மாக இருக்கமாட்டோம். லத்தியால் அடிப்போம். உங்களை சுட்டுக்கொல்வோம். சிறையில் அடைப்போம்.

    பாஜக ஆளும் மாநிலங்கள்

    பாஜக ஆளும் மாநிலங்கள்

    பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் தீதியின் வாக்காளர்களாக இருந்ததால் அவர்கள் மீது "தீதியின் (மம்தா பானர்ஜி) காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அதேநேரம் உத்தரபிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள எங்கள் பாஜக அரசாங்கங்கள் இவர்களை நாய்களைப் போல சுட்டுக் கொன்றன" இவ்வாறு பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறினார்.

    ஊடுருவல்காரர்கள்

    ஊடுருவல்காரர்கள்

    நாட்டில் இரண்டு கோடி "முஸ்லீம் ஊடுருவல்கள்" இருப்பதாகக் கூறிய அவர். இந்து வங்காளிகளின் "நலன்களை நாசமாக்கும்" நபர்களை அடையாளம் காணவும் கோஷ் அழைப்பு விடுத்தார். "ஒரு கோடி முஸ்லீம் ஊடுருவல்கள் மட்டும் மேற்கு வங்கத்தில் உள்ளது என்றும் மம்தா பானர்ஜி அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்றும் கோஷ் குற்றம்சாட்டினார்.

    ஏன் டெல்லியில் சுடவில்லை

    ஏன் டெல்லியில் சுடவில்லை

    காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், இது தான் பாஜக தலைவரின் மொழி, மிஸ்டர் திலீப் கோஷ், அப்படியானால் டெல்லி காவல்துறை #JNU இல் வேடிக்கையாக ஓடிக்கொண்டிருந்த ஏபிவிபி / பிஜேபி குண்டர்கள் நாய்களைப் போல ஏன் சுடவில்லை .அரசாங்க இயந்திரங்களின் வலிமையுடன் மக்களை அடிபணியச் செய்வதற்காக நீங்கள் இந்த மொழியில் (பதத்தில்) பேசுகிறார்கள் என்று கண்டித்தார்.

    English summary
    Bengal BJP president Dilip Ghosh controversially said that "Damaging Property? Our Governments Shot Them Like Dogs"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X