வலிகளை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை.. டேனிஷ் சித்திகி படங்களே போதும்..அதிர வைக்கும் 10 புகைப்படங்கள்
டெல்லி: புலிட்சர் விருது பெற்ற டேனிஷ் சித்திகி தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் டேனிஷ் சித்திகி எடுத்த புகைப்படங்கள் தேசிய அளவில் மட்டுமில்லை சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியவை.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டு ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையேயான மோதல் வலுப்பெற்றது. கந்தகார் பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலை இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது தாலிபான்களின் தாக்குதலில் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் டேனிஷ் சித்திகி தனது கேமராவில் பதிவு செய்த சம்பவங்கள் உலக அளவில் மிகப் பெரியளவில் விவாதங்களை ஏற்படுத்தியவை.

ரோஹிங்கியா பிரச்சினை
கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்போது சம்பவத்தின் வீரியத்தை உலகிற்கு உணர்த்தியது டேனிஷ் சித்திகி எடுத்த இந்தப் புகைப்படம். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வங்காள கடல் வழியாக வங்கதேசத்திற்கு அகதியாகப் பெண் ஒருவர் வருகிறார். பல மணி நேர கடற்பயணம் காரணமாகக் களைத்துப் போன அந்த ரோஹிங்கியா அகதி பெண் கரை எங்கே எனத் தொட்டு பார்க்கிறார். ரோஹிங்கியா அடக்குமுறைக்கு எதிராக அவரது பணிகளைப் பாராட்டி, 2018 ஆம் ஆண்டில், அவருக்கு புலிட்சர் விருது அளிக்கப்பட்டது.

டெல்லி கலவரம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் பல மாதங்கள் வரை நீட்டித்து. இந்தப் போராட்டத்தின் சமயத்தில் சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. கடந்த 2020 ஜனவரி 30 ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இளைஞன் ஒருவர் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். அப்போது இவர் எடுத்த படம் நாடு முழுவதும் பேசுபொருளானது.

வன்முறை
அதே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் சமயத்தில் இவர் எடுத்த மற்றொரு புகைப்படம் தான் இது. வன்முறை கும்பல் ஒன்று அங்கு இருந்த ஒருவரைச் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இது கடந்த 2020 பிப்ரவரி 24ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.

விவசாயிகள் போராட்டம்.
புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் பொதுவாக ஜனவரி மாதம் கடும் குளிர் நிலவும். அந்த குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். கடும் குளிரை விவசாயிகள் எப்படி எதிர்கொண்டனர் என்பதை விளக்கிய படம் தான்

ஆக்சிஜனுக்கு போராட்டம்
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக டெல்லியில் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. அந்தச் சமயத்தில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் டேனிஷ் சித்திகி எடுத்த புகைப்படம் ஆக்சிஜன் அவலத்தை விளக்கம் வகையில் இருந்தது.

கொரோனா லாக்டவுன்
கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முழு லாக்டவுன் காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவரது வலியைப் பதிவு செய்த படம்.

தன்பால் ஈர்ப்பார்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன்பால் ஈர்ப்பார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனைக் கண்டித்த 2016, ஜனவரி 16ஆம் தேதி மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இது.

நாக சாது
ஊர்வலத்திற்கு முன்பு நாக சாது ஒருவர் சாம்பலை எடுத்து தனது நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்கிறார். இதுபோன்ற புகைப்படங்களில் டேனிஷ் சித்திகி அதிக ஆர்வம் காட்டினார்.

மனித பிரமிட்
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மும்பையில் ஜன்மாஷ்டமி பண்டிகை கொண்டாட்டத்தின் சமயத்தில் களிமண் பானையை உடைக்க திருவிழாவின்போது பக்தர்கள் மனித பிரமிடு ஒன்றை உருவாக்க முயல்கின்றனர்.

ஐஎஸ் பயங்கவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தனர். அப்போது கடந்த ஏப்ரல் 29, 2017 ஆம் தேதி ஈராக்கின் மேற்கு மொசூலில் பகுதியில் ஈராக் பெடரல் போலீசார் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கையெறி குண்டை வீசியபோது எடுத்த படம். இப்படி பல்வேறு சூழல்களிலும் டேனிஷ் சித்திகி எடுத்த படங்களை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இப்படியொரு சிறந்த கலைஞனைத் தான், தாலிபான் தாக்குதலில் இழந்துள்ளோம்.
Image courtesy: Reuters
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications