டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாரை வாழ வைக்கும் இரு தலைநகரங்கள்.. வரலாற்றை மறந்து கொரோனாவின் பிடியில் சிக்கிய கொடூரம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவின் பிடியில் இந்திய தலைநகர் டெல்லியும், தமிழக தலைநகர் சென்னையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பொருளாதார ரீதியிலும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகிறார்கள்.

சிறிய நாடுகள், பெரிய நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என பெரும்பாலான நாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவை பொருத்தமட்டில் டெல்லியும், சென்னையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.

ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன் ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

காரணம் இரண்டுமே தலைநகரங்கள். டெல்லி இந்தியாவின் தலைநகர், சென்னை தமிழகத்தின் தலைநகர். இந்தியாவில் கொரோனா அனைத்து மாநிலங்களிலும் பரவியிருந்தால் பெங்களூர், இந்தூர், போபால், லக்னோ, திருவனந்தபுரம், ஹைதராபாத் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களில் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

பச்சை மண்டலங்கள்

பச்சை மண்டலங்கள்

ஆனால் அவை சிறிய அளவிலேயே இருக்கிறது. அதாவது டெல்லி, சென்னையை காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. எந்தெந்த பகுதிகளில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குறைவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து மத்திய அரசு சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்தது. இந்த பட்டியலில் டெல்லி நகரம் முழுவதுமே சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கு டெல்லியில்

மேற்கு டெல்லியில்

டெல்லியில் இதுவரை கொரோனாவால் 3,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1167 பேர் குணமடைந்துள்ளனர். 61 பேர் பலியாகிவிட்டனர். இதில் மத்திய டெல்லி பகுதிதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்தாற்போல் தென்கிழக்கு டெல்லியாகும். அது போல் மேற்கு டெல்லியிலும் கொரோனா அதிகமாகவே உள்ளது.

சிகப்பு மண்டலம்

சிகப்பு மண்டலம்

அது போல் சென்னையை பார்த்தோமேயானால் இங்கு நேற்று மட்டுமே கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 1,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பிட பல வரலாற்றுச் சிறப்புகளுக்கு பெயர் போன வடசென்னையில்தான் பாதிப்புகள் அதிகம். சென்னையும் சிகப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தியாவில் பெரும்பாலான இடங்கள் சிகப்பு மண்டலங்களின் கீழ் வரையறுக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் டெல்லியும் சென்னையும் வந்துள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைநகரங்கள் இரண்டுமே வந்தாரை வாழ வைக்கும் நகரங்களாகும். சென்னையில் ஒரு பெட்டிக் கடை வைத்தாலே போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது. அது போல் டெல்லியிலும் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளதால் இங்கு ஏதேனும் ஒரு தொழிலை செய்தாலே முன்னேறிவிடலாம் என்ற நிலையில் வட இந்திய மக்களுக்கு இருந்தது. இனி இங்கு பிழைப்பு தேடி மக்கள் வருவது குறைந்துவிடுமோ என்ற அதிர்ச்சி நிலவுகிறது.

English summary
Both the capital cities Delhi and Chennai are severely affected for Corona virus which leads concern about the future of the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X