டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஜராத் மாடலை நொறுக்கிய டெல்லி மாடல்.. அமித் ஷாவை பழி வாங்கிய பிரசாத் கிஷோர்.. பின்னணி என்ன?

டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரும் பரபரப்பிற்கு இடையில் டெல்லி தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 57 இடங்களில் முன்னிலை, பாஜக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பெரும்பாலும் இன்று மாலைக்குள் ஆம் ஆத்மி 60 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். அங்கு 10 தொகுதிகளில் மட்டும் பெரிய அளவில் இழுபறி நீடித்து வருகிறது.

    ஏ பப்லு.. இதெல்லாம் நியாயமே இல்லடா.. திரும்பத் திரும்ப நீயே ஜெயிச்சா எப்படிம்மா! ஏ பப்லு.. இதெல்லாம் நியாயமே இல்லடா.. திரும்பத் திரும்ப நீயே ஜெயிச்சா எப்படிம்மா!

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற இந்த வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம்தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசனை நிறுவனமாக இருந்தது. தமிழகத்தில் திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர்தான் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரச்சார திட்டங்கள் அனைத்தையும் வகுத்தவர்.

    எப்படி செயல்பட வேண்டும்

    எப்படி செயல்பட வேண்டும்

    அதாவது ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும். சமூக வலைதளங்களில் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். என்ன மாதிரியான கருத்துக்களை பதிவிட வேண்டும். குஜராத் மாடலுக்கு எதிராக டெல்லி மாடலை எப்படி வைரலாக்க வேண்டும். மக்களை எப்படி திரட்ட வேண்டும். 5 ஆண்டு ஆட்சி சாதனைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பல விஷயங்களை பிரசாந்த் கிஷோர்தான் வகுத்து கொடுத்தார்.

    கிஷோர் வெற்றி

    கிஷோர் வெற்றி

    ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் பாடலை கூட வெளியிட்டார். இந்த பாடல் அக்கட்சிக்கு பிரச்சாரத்தின் போது பெரிய அளவில் உதவியது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சிக்காக புதிய இணையதள டீம் ஒன்றையே பிரசாந்த் கிஷோர் உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பெரிய அளவில் அக்கட்சிக்கு உதவியது. டெல்லியில் இரண்டு லோக்சபா தேர்தல் உட்பட ஆறு தேர்தல்களில் ஆம் ஆத்மி இதுவரை போட்டியிட்டு இருக்கிறது.

    ஆம் ஆத்மி கிஷோர்

    ஆம் ஆத்மி கிஷோர்

    முதல்முறையாக இப்போதுதான் ஆம் ஆத்மி கிஷோரை தங்களுக்காக பணிக்கு அமர்த்தியது. தற்போது ஆம் ஆத்மி அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளது. இதற்கு பிரசாந்த் கிஷோர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஆம் ஆத்மி டெல்லியில் நடத்திய சிறப்பான ஆட்சியும் அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களும் கூட இதற்கு காரணம்தான். இந்த தேர்தலுக்காக கிஷோர் அறிவுரையின் பெயரில் 8000 கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    கடினம்

    கடினம்

    பிராண்ட் ஏகே என்று வாசகம் உருவாக்கப்பட்டது. 70 தொகுதிகளில் தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர். இளைஞர்களை கவர தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களை மொத்தமாக ஆம் ஆத்மி ஆக்கிரமித்தது. 20-25 வயதில் பல இளைஞர்களை பணிக்கு அமர்த்தினார் கிஷோர். இதற்கு எல்லாம் பயனாக தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார்.

    சிஏஏ எதிர்ப்பு

    சிஏஏ எதிர்ப்பு

    முன்னதாக சிஏஏ பிரச்சனை காரணமாக பாஜக பிரசாந்த் கிஷோர் இடையே சண்டை வந்தது. இதனால் பீகார் அரசியலில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தே இதனால், பிரஷாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். நிதிஷ் - பிரசாந்த் கிஷோர் நட்பு மொத்தமாக உடைந்தது. அமித் ஷாவிற்கு எதிராக அப்போதே கிஷோர் பேட்டி கொடுத்தார். தற்போது அவர் சொன்னது போலவே கிஷோர் டெல்லி தேர்தலில் அமித் ஷாவை பழி வாங்கி உள்ளார்.

    English summary
    Delhi Assembly Election Result: Prashant Kishor helped Aam Aadmi in Big time in Capital against BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X