தமிழர்கள் போராடினாலும் வித்தியாசம்தான்.. டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகள்
டெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல்லி மக்களை பெரிதும் ஈர்த்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல்லி மக்களை பெரிதும் ஈர்த்து இருக்கிறார்கள். தமிழர்களின் போராட்ட முறையை பார்த்து அவர்கள் வியந்து போய் உள்ளனர்.
டெல்லியே தற்போது ஸ்தம்பித்து போய் இருக்கிறது. 4 லட்சம் விவசாயிகள் அங்கு போராடி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் அவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

வந்தவுடன் போராட்டம்
நேற்று காலை டெல்லிக்கு சென்ற விவசாயிகள், மாலை வரை எல்லாம் போராட்டம் செய்ய காத்திருக்கவில்லை. நேற்று காலை வந்தவுடனே போராட்டம் செய்ய தொடங்கிவிட்டனர். காலையிலேயே டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது பலரது கவனத்தை ஈர்த்தது.

ஆடை இல்லாமல் போராட்டம்
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் எல்லோரும் அரை ஆடை உடுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். இதற்கு பின் ஒரு உளவியல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா மாநில விவசாயிகளும் அவர்களின் பாரம்பரிய உடைகளில் வந்துள்னனர். ஆனால் தமிழக விவசாயிகள் மட்டும்தான், விவசாயத்தின் போது என்ன உடையை அணிந்து இருப்பார்களோ அதையே அணிந்து போராட்டம் செய்து வருகிறார்கள். அதாவது வயலில் நிற்பது போல வெறும் துண்டு அணிந்தோ, கைலி அணிந்தோ போராடி வருகிறார்கள்.

வித்தியாசம்
இதுமட்டுமில்லாமல், தலையில் கொடி கட்டி இருப்பது, பச்சை துண்டு போட்டு இருப்பது, கழுத்தில் எலும்புக் கூடு மாலை போட்டு இருப்பது என்றும் போராடுகிறார்கள். ராஜஸ்தான் மாநில விவசாயிகள் ஆட்டம், பாட்டம் என்று போராட்டம் செய்து வருகிறார்கள். மாறாக தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம் வைத்து வருகின்றனர்.

திரும்பி பார்த்தனர்
இது டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்களின் வித்தியாசமான போராட்ட முறை அவர்களை கவர்ந்து இருக்கிறது. போராட்டம் செய்பவர்களின் நோக்கமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications