பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் தீ விபத்து.. 9 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்.. டெல்லியில்
டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று இரவு சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில், பிரதமரின் இல்லம் அமைந்துள்ளது. இரவு 7.25 மணி அளவில் இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் இல்லத்தில் எந்த பகுதியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேநேரம் இது சிறிய அளவில்தான் தீ விபத்துதான் என்றும், பிரதமரின் இல்லம் என்பதால்தான், 9 வண்டிகளில் வீரர்கள் அவசரமாக விரைய நேரிட்டது, மற்றபடி அச்சப்பட தேவையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கங்கை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது கங்கை தீரத்தில் உள்ள படிக்கட்டில் தவறுதலாக தடுமாறி கீழே விழுந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதுபோன்ற அபசகுணங்களை தவிர்க்க, சிறப்பு பூஜைகளை பிரதமர் மேற்கொள்வது நலம் பயக்கும் என பாஜக ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications