நாளை ஆரம்பிக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. தடை விதிக்க மறுத்த டெல்லி ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சட்டப்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை அளித்த உறுதிமொழியை நீதிமன்றம் ஏற்று கொண்டது..

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்தும் அக்டோபர் 10ஆம் தேதி கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. அப்போது ஜந்தர் மந்தர் சாலைக்கு செல்ல முயன்ற நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Cockroach Janata Party Protest

தடை விதிக்க மறுப்பு

இந்த சூழலில் தான் டெல்லி கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே போராட்டத்தால் வியாபாரிகளின் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் நடைபாதை வியாபாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பண்டிகைக் காலத்தில் டெல்லியின் மையப்பகுதியில்.. அதிலும் வார இறுதியில் கடைகள் மூடப்பட்டால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார்.

வாதம்

அவர் மேலும், "கனாட் பிளேஸின் மையப்பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.. இது போராட்டத்துக்கான இடம் அல்ல.. ஏற்கெனவே கடைகளை மூட தொடங்கிவிட்டனர். இது தசரா வீக் எண்ட். இந்த நேரத்தில் போராட்டம் நடந்து கடைகள் மூடப்பட்டால் வியாபாரிகள் வாழ்வாதாரமே முடங்கிவிடும்.. இந்த போராட்டம் தடுக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

டெல்லி போலீஸ்

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்டாலும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், போராட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும் டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு முக்கிய வழக்குகள்

முன்னதாக இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்திலும் இரு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வந்தது. எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியை குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், "யாரும் நீதித்துறையை மிரட்ட முடியாது" என்று தெரிவித்தார்.

அதேபோல ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் அனுமதி ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் டெல்லி போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், விளக்கம் திருப்பி அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+