கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி? கடத்தி செல்ல அருகே வந்த கார்.. தொடரும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மாணவி மற்றும் அவரது தோழியை காரில் வந்த சிலர் பின்தொடர்ந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறிய அவர்கள், ஒரு கட்டத்தில் இருவரையும் காருக்குள் இழுத்து செல்ல முயன்றதாக புகார் எழுந்துள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் சீண்டல் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அப்படியொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. டெல்லியின் ஹிந்து கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை படித்து வரும் மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Delhi assault India

என்ன நடந்தது

புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில், விஜய்நகர் ஹக்கிகத் பூங்காவுக்கு சென்றுவிட்டு தனது தோழியுடன் முகர்ஜி நகர் பகுதியில் நடந்து சென்றதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். அப்போது வெள்ளை நிற டாடா சஃபாரி காரில் வந்த சிலர், இரு மாணவிகளையும் பார்த்தோ ஏதோ ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த மாணவி, "தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், அங்கிருந்து சென்றுவிடுமாறும் நாங்கள் கூறினோம். ஆனால், அவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொண்டே இருந்தனர். நாங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்றோம். இருப்பினும், அவர்கள் எங்களை விடவில்லை. காரிலேயே எங்களை தொடர்ந்து பாலோ செய்து கொண்டு வந்தனர்" என்றார்.

கடத்த முயற்சி?

இதையடுத்து நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்வதற்காக இரு மாணவிகளும் நின்றுள்ளனர். அப்போது காரில் வந்தவர்கள் இரு மாணவிகளுக்கு அருகே வந்து, காருக்குள் இழுத்து செல்ல முயன்றதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். அப்போது தனது தோழி செல்போனை வெளியே எடுத்து வீடியோ எடுக்க முயன்றதும், அந்த நபர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க முகர்ஜி நகர் காவல் நிலையத்துக்கு சென்றதாக மாணவி கூறியுள்ளார். ஆனால், சம்பவம் நடந்த பகுதி தங்களது காவல் நிலைய எல்லைக்குள் வராது என போலீசார் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அடுத்த 5 மணி நேரத்தில் 3 காவல் நிலையங்களுக்கு சென்றதாகவும், ஆனால் தங்களது புகார் தொடர்பாக எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் மாணவி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்யக்கூட தாமதம்

அவர் மேலும், "4 மணி நேரமாக நானும் எனது நண்பர்களும் அங்கேயே தான் இருந்தோம். அதற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடு இரவில் நான் இங்கே நிற்பதை பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் ஓட்டுநர் நமன் அனில் குமார் என்பது தெரிய வந்தது. சம்பவத்தின்போது காரில் மேலும் 2 முதல் 3 பேர் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுகள்

டெல்லியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. செப்டம்பர் 10ம் தேதி ஸ்வரூப் நகரில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, செப்டம்பர் 16ம் தேதி சதர் பஜாருக்கு சென்ற சிறுமி ஒருவர், கடைக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி கிஷன்கஞ்ச் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மற்றொரு புகார் எழுந்தது. அதே நாளில் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அஸ்தா குஞ்ச் பூங்காவில் தனது ஆண் நண்பருடன் இருந்த 17 வயது சிறுமியையும் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களை போலீசார் என அறிமுகப்படுத்தி அந்த சிறுமியை ஏமாற்றி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+