Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாரதாவை கொன்று.. 35 பீஸாக வெட்டிவிட்டு.. அவரது மோதிரத்தை புது கேர்ள் பிரண்ட்டிற்கு கொடுத்த அப்தாப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்த சாரதா படுகொலை குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த மே மாதம் தலைநகர் டெல்லியில் கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியது. லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த சாரதா என்ற 27 வயது பெண்ணை அவரது காதலனே படுகொலை செய்தார்.

அதுவும் கொலை செய்த பின் சாரதா உடலை 35 பீஸாக வெட்டிய காதலன் அப்தாப், அதை அடுத்து வரும் நாட்களில் மாநிலத்தின் பல இடங்களில் வீசியுள்ளார். இந்தக் கொடூரத்தைச் செய்த அவருக்குக் குற்ற உணர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

 டெல்லி கொடூரம்

டெல்லி கொடூரம்

நாட்டையே மிரள வைத்த இந்தக் கொடூரம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாரதாவின் தந்தை இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், சாரதா சண்டை போட்டுவிட்டு இவருக்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு அவரது அப்பா உடன் பேசவே இல்லையாம். இருப்பினும், சில மாதங்களாகத் தனது மகளின் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பதிவும் இல்லை என்பதால் அவரது தந்தை சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார். அப்போது தான் சாராத மாயமானதைத் தெரிந்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

 ஆயுதங்கள் மீட்பு

ஆயுதங்கள் மீட்பு

இது தொடர்பாக அவரது தந்தை போலீசாரிடம் அளித்த புகாரில் தான் இந்தக் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்து பிறகுத் தனது காதலி சாரதா உடலைத் துண்டு துண்டாக வெட்ட ஆப்தாப் பயன்படுத்திய ஆயுதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த வாரம் தான் 6 அங்குல நீளமுள்ள ஐந்து கத்திகளையும் போலீசார் மீட்டனர். இவை தடயவியல் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

 சாரதாவின் மோதிரம்

சாரதாவின் மோதிரம்

அப்தாப் தனது காதலி சாரதாவை கொன்ற பிறகு, எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மற்றொரு பெண்ணை டேட்டிங் செயலி மூலம் சந்தித்துள்ளார். மருத்துவரான இந்த பெண்ணை, சாரதாவின் உடல் பாகங்கள் பிரிட்ஜில் இருக்கும் போதே, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். இதற்கிடையே சாரதாவின் மோதிரத்தையே இந்த பெண் டாக்டருக்கும் பரிசாகக் கொடுத்துள்ளான் அப்தாப்! அந்த பெண்ணிற்கு இந்த கொலையில் எதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 பெண் மருத்துவர்

பெண் மருத்துவர்

இந்த பெண் மருத்துவரையும் சாரதாவை போலவே மொபைல் டேட்டிங் தளமான பம்பிள் மூலமே அப்தாப் மீட் செய்துள்ளார். சாரதா உடல் இருக்கும் போதே, இரவு நேரத்தில் இந்த பெண்ணை அவன் வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பெண் மருத்துவர் மட்டுமின்றி, பல பெண்களை பம்பிள் தளத்தில் அப்தாப் சந்தித்துள்ளான். இது தொடர்பாக பம்பிள் செயலியிடம் இருந்து தரவுகளைப் பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே சாரதாவின் மோதிரத்தையே கொலைக்குப் பின், புதிதாக டேட்டிங் செய்யும் பெண்ணுக்கும் அவன் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 மோசமான உறவு

மோசமான உறவு

சாரதா மற்றும் அப்தாப் உறவு சுமுகமாக இருந்திருக்கவில்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே தான் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சாரதா தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் போதெல்லாம், அதைத் தவிர்த்து சண்டை போட்டுள்ளான் அப்தாப். அப்படித்தான் கடந்த மே மாதம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அத்துமீறிப் போகவே, ஆத்திரத்தில் அவன் சாதராவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். அப்போது அவன் கஞ்சா போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

இதற்கு முன்னரும் கூட பல நேரங்களில் சாதராவை அப்தாப் கொடூரமாகத் தாக்கியுள்ளான். அப்தாப் தாக்கியதால் சாரதாவுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதை சில மாதங்களுக்கு முன்பு, அவரே தனது நண்பர்களுடன் பகிர்ந்து இருந்தார். மேலும், தன்னை அப்தாப் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டிவிடுவான் என்று அஞ்சுவதாகவும் கூறியுள்ளார். அவர் நினைத்துப் போலவே விபரீதம் நடந்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் அப்தாப்பிற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று சாரதாவின் தந்தை வலியுறுத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+