புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்!
டெல்லி: டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்று விமானம் ஒன்று கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான அலியன்ஸ் ஏர் 9643 விமானத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி 8.40க்கு இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மேலே சென்ற உடனே அதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன் லேண்டிங் கியரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்பக்கம் இருக்கும் டயர்கள் உள்ளே செல்லாமல் அப்படியே இருந்துள்ளது. இதனால் விமானம் மீண்டும் யு-டர்ன் போட்டு டெல்லிக்கு வந்தது.
10 நிமிடத்தில் மீண்டும் வந்த அலியன்ஸ் ஏர் 9643 விமானம் டெல்லியில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கும் போது பெரிய அளவில் டயரில் இருந்து நெருப்பு வந்துள்ளது. ஆனால் இதனால் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
விமானத்தில் சென்ற 59 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று அலியன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் 10.15க்கு வேறு விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் என்று அலியன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications