உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்லை.. மனைவியை கடைசியாக கட்டிப்பிடித்த டெல்லி இளைஞரின் பாச பதிவு
டெல்லி: அரவணைப்புகள் தான் இந்த உலகத்தையே தாங்கி நிற்கிறது. மொழிகளை கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் தூய்மையான வடிவமாக அரவணைப்புகள் இருக்கிறது. வெறும் வார்த்தைகளால் அந்த உணர்வை வெளிப்படுத்தி விட முடியாது. இன்று கட்டிப்பிடிக்கும் நாள் இல்லை.. எனினும் திடீரென்று இதைப் பற்றிப் பேசுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடனான கடைசி அரவணைப்பின் வலியை பகிர்ந்து கொண்ட லிங்கிட் இன் பதிவுதான் அதற்கு காரணம்.
அரவணைப்பு, கட்டிப்பிடித்தல், தோள் கொடுத்தல், கை கொடுத்தல் என தொடுவதன் மூலம் ஒருவரை அரவணைக்க முடியும். டெல்லியைச் சேர்ந்த பிரதாப் சுதன் என்பவர் தனது மனைவியை கடைசியாக அரவணைத்த வலியை விவரித்துள்ளார். உங்கள் அன்புக்குரியவர்களை முடிந்தவரை அடிக்கடி கட்டிப் பிடியுங்கள், ஏனென்றால் கடைசி நேரம் எப்போது என்று உங்களுக்குத் தெரியாது என்பதை உணர்த்தும் வகையில் பிரதாப் சுதன் உருக்கமாக எழுதியுள்ளார்.

பிரதாப் சுதன் தனது பாலோயர்களை "நன்றாக கட்டிப்பிடி" என்று கேப்சனுடன் பதிவினை எழுதியுள்ளார். தனது மனைவியை இழந்த துரதிர்ஷ்டவசமான நாளை நினைவு கூர்ந்த லிங்க்ட் இன் பயனாளர் பதிவு அது.. "என் மனைவி எனக்கு கொடுத்த கடைசி அணைப்பு எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு சற்று முன்பு அது..
அன்று காலை நேரம் அது,. எனக்கு, அது மற்றொரு காலை அரவணைப்பு. என் அன்பை, என் அரவணைப்பை, என் நம்பிக்கையை அவள் உணர வேண்டும் என்று நான் விரும்பினேன். நாங்கள் ஒன்றாக வீடு திரும்புவோம் என்பதை அவள் அறிய வேண்டும் என்றும் நான் விரும்பினேன். ஆனால் அவளுக்கு அப்படி இல்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது, என் மனைவி திரும்பி வரமாட்டாள் என்பதை அறிந்த என்னுடைய அமைதியான, ஈரமான அணைப்பு என்று...
வெறும் சிறிது நேரம் அல்ல, என்றென்றும் விடைபெறும் ஒருவரின் ஆழமான அணைப்பு என்று.. அது எங்களை தயார்படுத்தாத ஒரு அணைப்பு. அது என் வாழ்நாள் முழுவதும் நான் சுமக்கும் ஒரு அணைப்பு. வேறு எந்த அணைப்பும் அதனை நெருங்க கூட முடியாது" என்றார்.
இந்த பதிவினை எழுதிய பிரதாப் சுதன். அரவணைப்புகள் பற்றியும் கட்டிப்பிடிப்பது பற்றியும் உணர்வுப்பூர்வமாக விளக்கமும் அளித்துள்ளார். அதன்படி "ஒரு வயதான தந்தை தனது குழந்தை தன்னை விட்டு புறப்பட்டு செல்லும் போது, தடுத்து நிறுத்த முயற்சிப்பார்.. அதேபோல் ரயில் நிலையத்தில் ஒரு தந்தை தனது குழந்தையை போருக்குச் செல்வதற்கு முன்பு தனது நெஞ்சில் ஒத்திக் கொள்வது, இரண்டு காதலர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் போது, அவர்களின் உடல்கள் வார்த்தைகளால் முடியாத நிலை, கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் காத்திருந்தவரின் கைகளில் சரிவது, புலம்பெயர்ந்த தொழிலாளி வீடு திரும்பும் போது அவரது தாயின் அரவணைப்பு, பேரழிவில் தப்பும் போது காப்பாற்றும் கரங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரதாப் சுதன் கூற்றுப்படி, "ஒரு அரவணைப்பு உங்களை வரவேற்கலாம். அது உங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கலாம். அது அன்பைத் தாங்கலாம் அல்லது உயிர்ப்புடன் வைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வெறும் அரவணைப்பு அல்ல.
வார்த்தைகள் தோல்வியடையும் போது அது வந்து இதயத்திற்கு நிலையான ஒன்று தேவைப்படும் நங்கூரமாக அந்த அரவணைப்பு இருக்கும். நாம் இப்போது தொடுதலைக் கடந்து விரைந்து எங்கோ பயணிக்கும் உலகில் வாழ்கிறோம். திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நெருக்கத்தைத் தவிர்த்துவிடுகிறோம்.
நாம் மற்றவர்களை தாங்கிப் பிடிக்கப்படவும், நமக்கானவர்களை சுமக்கவும், சுமக்கப்படவும் படைக்கப்பட்டுள்ளோம். இன்று ஒருவரைத் தாங்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால், அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்துகொண்டது போல், உங்களுக்கு நெருக்கமானவர்களை பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நம் வாழ்க்கையில் கடைசியில் நம்மிடம் மிச்சம் இருக்க போவது நம்மைப் பிடித்தவரின் நினைவு மட்டுமே" இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவு பல நெட்டிசன்களை கண்ணீர்விட வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications