ஜந்தர் மந்தரில் போராட தடை.. ராம்லீலா மைதானம் 2026ல் 3 நாள் மட்டுமே ‘ப்ரீ’..மத்திய அரசுக்கு நிம்மதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் டெல்லியில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம், சிபிடி மைதானம் உள்ளிட்ட இடங்கள் புதிய போராட்ட இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ராம்லீலா மைதானம் தான் டெல்லி ஜந்தர் மந்தர் அருகே அமைந்துள்ள நிலையில் அங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ரூ.1.21 லட்சம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் டிசம்பர் 29, 30,31 என்ற 3 நாட்கள் மட்டுமே முன்பதிவு இன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஜந்தர் மந்தர் என்பது போராட்டம் நடத்துவதற்கான இடமாக அமைந்து இருந்தது. 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரால் நேற்றைய தினம் புதிய அறிவிப்பு வெளியானது.

delhi ramlila maidan jantar mantar

டெல்லியில் ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தருக்கு பதிலாக புதிதாக 3 இடங்களை போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒன்று ராம்லீலா மைதானம். இது ஜந்தர் மந்தரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2வது இடம் புராரி மைதானம். இது ஜந்தர் மந்தரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு டெல்லியில் அமைந்துள்ளது. 3வது இடம் சிபிடி கிரவுண்ட். இது ஜந்தர் மந்தரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு டெல்லியில் அமைந்துள்ளது. இதற்கான உத்தரவை டெல்லி மாநகர காவல் ஆணையர் அனுராக் குமார் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டெல்லி ஜந்தர் மந்தர் அருகே உள்ள ராம்லீலா மைதானம் இந்த ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே 'ப்ரீ'யாக உள்ளது. அதுவும் ஆண்டின் கடைசி நாட்களாக வரும் டிசம்பர் 29, 30, 31 என்ற 3 நாட்கள் மட்டுமே முன்பதிவின்றி உள்ளன. மீதமுள்ள அனைத்து நாட்களும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்லீலா மைதானத்தை எடுத்து கொண்டால் மொத்தம் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில் சின்ன இடத்தில் மட்டுமே கட்டணம் ஏதுமின்றி இலவசமாக போராட்டம் நடத்த முடியும். அங்கு அதிகபட்சமாக 150 பேர் மட்டுமே கூடலாம். அதேவேளையில் பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்றால் ராம்லீலா மைதானத்தை வாடகை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கூடலாம். ஆனால்
இங்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒரு நாளைக்கு வாடகை கட்டணமாக வரிகள் உள்பட ரூ.1.21 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.50 ஆயிரம் வாடகை கட்டணமாக பிடிக்கப்படும். அதேவேளையில் 55 ஆயிரம் என்பது திரும்ப வழங்கப்படும்.

இந்த மைதானத்தை முன்பதிவு செய்வதற்கான அனுமதியை டெல்லி மாநகராட்சியின் தோட்டக்கதலைத்துறை வழங்கி வருகிறது. இந்த அனுமதிக்கு போலீசாரின் தடையில்லா சான்று அவசியமாகிறது. தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்துள்ளநிலையில் அதன் அருகே உள்ள ராம்லீலா மைதானமும் அடுத்த இரண்டரை மாதங்களில் கடைசி 3நாட்கள் மட்டுமே 'ப்ரீ'யாக உள்ளது. இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த முடியாது என்பது மத்திய அரசுக்கு ஹேப்பி நியூஸாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+