PG ஹாஸ்டல் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! உள்ளே சிக்கிக்கொண்ட மாணவர்கள்! டெல்லியில் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த PG ஹாஸ்டல் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 5 பேர் மீட்கப்பட்டிருகின்றனர். மேலும் உள்ளே சிக்கியிருப்பவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மீட்கப்பட்ட 5 பேரில் 3 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Delhi PG building

இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம், குருகிராமை சேர்ந்த ஆனந்த் பன்சால் என்பவருக்கு சொந்தமானது. 'ஹாஸ்டல் டேஸ்' என்கிற பெயரில் அவர் இக்கட்டிடத்தில் விடுதியை நடத்தி வருகிறார். கட்டிடத்தின் தரைத்தளத்தில் மெடிக்கல் ஷாப் இயங்கி வந்திருக்கிறது. விபத்து நடந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு போதுமான சுவாசம் கிடைப்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இந்த விபத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளுக்கு டெல்லி அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நள்ளிரவிலும் நீடிக்கும் என தெரிகிறது. டெல்லியில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்தில் சிக்குவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் சில இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+