டெல்லி - துபாய் விமானம் அவசர அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்.. பதறிப்போன பயணிகள் - என்ன நடந்தது?
கராச்சி : தலைநகர் டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் திடீரென தரை இறக்கப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் சாதாரணமாகத்தான் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை. ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால், கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கராச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுள்ளது என ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமானம் அவசர அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது குறிப்பிடத்தக்கது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் உடனடியாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications