டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் விடாமல் அமளி.. காங். எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அதிரடி!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .

டெல்லி கலவரம் தொடர்பான அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கி உள்ளது. அங்கு கடந்த மூன்று நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

Delhi Violence: 7 MPs from Congress suspended from Lok Sabha after heavy ruckus

இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே அவை டெல்லி கலவரம் தொடர்பான வாதத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் கலவரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். லோக்சபாவில் கலவரம் பற்றி விவாதம் செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், இதை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நேற்றே இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னே வர கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது.அப்படி செய்தால் அந்த எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். ஆனால் இன்றும் டெல்லி கலவரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.

காங்கிரஸ் எம்பிக்கள் இன்று அவை முன் வந்து அமளியில் ஈடுப்பட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள் விடாமல் முன்னே வந்து கோஷமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார் .

அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய், என் பிரதான், டீன் குறிகோஸ், ஆர் உன்னிதன், மாணிக்கம் தாக்கூர், பென்னி பெனான், குர்ஜீத் சிங் ஆகியோர் சபாநாயகர் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்க அவர்கள் 7 பேரும் கலந்து கொள்ள முடியாது.

English summary
Delhi Violence: 7 MPs from Congress suspended from Lok Sabha after heavy ruckus on riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X