Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரகசிய கோப்புகளை மன்மோகன் சிங் பகிர்ந்தாரா?.. அப்போ ஆதாரத்தை காட்டுங்க.. சவால் விடுத்த ப சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் அலுவலகத்தின் ரகசிய கோப்புகளை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சோனியா காந்திக்கு பகிர்ந்ததாக கூறிய பத்திரிகையாளருக்கு ஆதாரத்தை காட்டுமாறு ப சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.

நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும் சசி தரூரும் போட்டியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போலவே காந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவராக கூறப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.

மல்லிகார்ஜூன் கார்கேவின் வியூகம்

மல்லிகார்ஜூன் கார்கேவின் வியூகம்


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே மூத்த அரசியல்வாதி ஆவார். 80- வயதான கார்கே தலித் சமூகத்தை சேர்ந்தவர். பல்வேறு அரசியல் நெருக்கடியான கால சூழல்களையும் திறம்பட கையாண்ட கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பது அக்கட்சிக்க்கு வலு சேர்க்கும் என்று காங்கிரசார் நம்புகின்றனர். அதேபோல், வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழு உத்வேகத்துடன் போட்டியிட மல்லிகார்ஜூன் கார்கேவின் வியூகம் முக்கிய பங்கு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

தலைவர் தேர்தலில் வெற்றி

தலைவர் தேர்தலில் வெற்றி

அதேவேளையில், மல்லிகார்ஜூன கார்கே வெறும் நேரு காந்தி குடும்பத்தினரின் ரிமோட் கன்ட்ரோலாகவே செயல்படுவார் என்று விமர்சித்து வருகின்றனர். சோனியா காந்தி குடும்பத்தினர் சொல்வதை மட்டுமே கெட்டு செயல்படுவார் என்றும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கப்போவது இல்லை என்றும் பாஜக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அது தொடர்பாக தேசிய ஊடகங்களில் பலவற்றிலும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

ப.சிதம்பரம் பதிலடி

ப.சிதம்பரம் பதிலடி

மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா? என்ற தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெற்றன. இந்தியா டுடே தொலைக்காட்சியிலும் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்த கருத்துக்களுக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

 தொலைக்காட்சி விவாதத்தின் போது

தொலைக்காட்சி விவாதத்தின் போது

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான் ப.சிதம்பரம் கூறுகையில், 'நேற்றைய இந்திய டுடே தொலைக்காட்சி விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அரசின் ரகசிய காப்பு சட்டங்களை மீறி பிரதமர் அலுவலகத்தின் ரகசிய கோப்புகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துச்செல்லப்பட்டதாக கூறினார்.

 எதிர்ப்பை பதிவு செய்தேன்

எதிர்ப்பை பதிவு செய்தேன்

இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நான் உடனடியாக எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். இந்த விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டிருந்த பிரவீன் சக்ரவர்த்தி ஆதாரங்களை காட்டுமாறு மூத்த பத்திரிகையாளருக்கு சவால் விடுத்தார். தனது கருத்துக்கு ஆதரவாக சில பதில்களை அளித்த மூத்த பத்திரிகையாளர் ஆதாரங்களை காட்டுவதாக ஒப்புக்கொண்டார்.

 ஆதாரத்தை காட்டுமாறு சவால்

ஆதாரத்தை காட்டுமாறு சவால்


இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கான நேரம் தொடங்கிவிட்டது என்பதை நான் அந்த மூத்த பத்திரிக்கையாளருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக முன்வைத்த இந்த பொறுப்பற்ற கருத்துக்களுக்கான ஆதாரத்தை காட்டுமாறு நாங்கள் சவால் விடுக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+