தொகுதி மறுசீரமைப்பு விவாதம் நடத்த மறுப்பதா? நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுத்து வரும் மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குக் கண்டனம் தெரிவித்து இன்று திமுக எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்த கண்டனப் போராட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிகளும் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மக்கள் தொகை விகிதத்தின் கீழ் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதால் தென்னிந்திய மாநிலங்கள் மிக மோசமாக பாதிப்படையும். ஆனால் வட இந்திய மாநிலங்களோ மக்கள் தொகையை கட்டுப்படுத்ததால் கூடுதலான தொகுதிகளைப் பெறக் கூடும்.
இதனால் தென்னிந்திய மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். இதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் 22-ந் தேதி சென்னையில் 3 மாநிலங்களின் முதல்வர்களை உள்ளடக்கிய பல்வேறு மாநில பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்டை நடத்த இருக்கிறது.
#WATCH | Delhi | DMK MPs Kanimozhi, T Siva and Dayanidhi Maran, along with party MPs, hold protest on the issue of delimitation, in Parliament House premises pic.twitter.com/5OlVaAdjpw
— ANI (@ANI) March 19, 2025
இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மத்திய அரசு விவாதிக்க மறுத்து வருகிறது.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இருந்து திமுக எம்பிக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்; இன்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்றனர். மேலும் தென்னிந்திய மாநிலங்களின் எம்பிக்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications