வயதாகிறது என்று எப்போது அறிந்துகொள்ள முடிகிறது தெரியுமா? மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி இன்ஸ்டா பதிவு
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டிபார்மண்ட் ஸ்டோர் ஒன்றில் முகக்கவசம் அணிந்த படி ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவோடு கேப்ஷனில், 'விடுமுறை நாட்களில் பொழுதை போக்குவதை விட கடைகளில் பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபடும் போது உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது..தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை ஸ்மிரி இரானி வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஸ்மிரிதி இரானி இன்ஸ்டா பதிவு
ஸ்மிரிதி இரானியை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.2 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள். அரசியல் பதிவுகளை தாண்டி தனது சொந்த வாழ்க்கை குறித்தும் ஸ்மிரிதி இரானி பதிவிடும் பதிவுகள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில், ஸ்மிரிதி ரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு வயதாகிறது என்பதை நீங்கள் உணரத்தொடங்குவது எப்போது தெரியுமா.. என்று கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பணியில் ஈடுபடும் போது
டிபார்மண்ட் ஸ்டோர் ஒன்றில் முகக்கவசம் அணிந்த படி நிற்கும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஷாப்பிங் செய்வது போல தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் ஸ்மிரிதி இரானி, விடுமுறை நாட்களில் பொழுதை போக்குவதை விட கடைகளில் பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபடும் போது உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை நீங்கள் அறியத் தொடங்குகிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். மனைவியின் வாழ்க்கை என்ற பொருளில் லைப் ஆஃப் வைப் என்ற ஹேஷ்டேக்குடன் இந்த பதிவை ஸ்மிரிதி இரானி பதிவிட்டுள்ளர்

நெட்டிசன்கள் கருத்து
ஸ்மிரிதி இரானியின் இந்த பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகள் பெற்றுள்ளது. "அரசியல்வாதிகள் இதுபோன்ற பதிவுகளை போடுவது சிறப்பானதாக உள்ளது. இந்திய அரசியல்வாதிகள் இது அதிகம் இல்லை" என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், இந்த வாடிக்கையாளர் இந்தியாவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி என்பதை இந்த கடைக்காரார் அறிவாரா? என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நடிகை
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அரசியலில் கால் பதிப்பதற்கு முன்பாக தொலைக்காட்சி நடிகையாக நாடு முழுவதும் பிரபலம் அடைந்தவர் ஆவார். பின்னர் பாஜகவில் இணைந்த ஸ்மிரிதி இரானி கடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து நாடு முழுவதும் கவனம் பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக பதவி வகித்து வருகிறர். பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் மனித வள மேம்பாடு ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications