டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவத்திற்கு மக்கள் அதிகம் செலவிடுவதை தடுக்க வேண்டும்.. பொருளாதார ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார கணக்கெடுப்பு 2020-21 சுகாதாரத் துறையின் நீண்டகால நோக்கங்கள் குறித்து பேசியுள்ளது. மருத்துவ செலவீனங்களை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் பொதுச் செலவினங்களை 2.5-3 சதவீதமாக உயர்த்துவதன் மூலம், மக்களின் மருத்துவ செலவினங்களை (ஓஓபிஇ) தற்போதைய 65 சதவீதம் என்ற மட்டத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கலாம் என்று கூறியுள்ளது.

அதிக தனிநபர் செலவினங்களைக் கொண்ட மாநிலங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவ செலவீனங்கள் குறைவாக உள்ளன.

மொத்த உற்பத்தியில் மருத்துவ சேவை

மொத்த உற்பத்தியில் மருத்துவ சேவை

எனவே முன்னேறிய மாநிலங்கள் சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திலிருந்து, 2.5-3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 பொது செலவீனத்தை கூட்ட வேண்டும்

பொது செலவீனத்தை கூட்ட வேண்டும்

"பொதுச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திலிருந்து 2.5-3 சதவீதமாக அதிகரிப்பது ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களை 65 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கக்கூடும்" என்று பொருளாதார கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

பாக்கெட்டிலிருந்து செலவு

பாக்கெட்டிலிருந்து செலவு

ஓஓபிஇ என்பது ஒரு நோயாளி நேரடியாக செலுத்தும் செலவு ஆகும். சுகாதார சேவையின் முழு செலவையும் காப்பீடு ஈடுசெய்யாமல் போனால் மக்கள் கைகளில் இருந்து அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

மருத்துவ செலவை குறைக்க வேண்டும்

மருத்துவ செலவை குறைக்க வேண்டும்

முன்னேறிய மாநிலங்கள் தற்போது தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பகுதியை சுகாதாரத்துக்காக செலவிடுகின்றன. உலகில் ஓஓபிஇ அதிகமான விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. மக்களிடம் மருத்துவ செலவை குறைக்க வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. எனவே பட்ஜெட்டில், இதற்கு ஏற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

English summary
The Economic Survey 2020-21 has batted for a long-term outlook on the healthcare sector, stating that an increase in public spending to 2.5-3 percent can reduce out-of-pocket expenditure (OOPE) to 30 percent from the current level of 65 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X