டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய பொருளாதாரம் V வடிவத்தில் வளரும்.. கொரோனா தடுப்பூசி காரணம்: பொருளாதார ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசி காரணமாக V வடிவத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

Economic Survey says vaccines to spur V-shaped recovery

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 7.7 சதவீதமாக இருக்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் நோயைக் கட்டுப்படுத்த வாரக்கணக்கில் கொண்டுவந்த நாடு தழுவிய லாக்டவுன் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் கொரோனா தடுப்பூசி, இந்திய பொருளாதாரத்தை V வடிவ மீட்யை நோக்கி அழைத்துச் செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

V வடிவம் என்றால், வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் அதே வேகத்தில் வளரும் என்பது அர்த்தம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

முன்னதாக, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவை விவசாயிகளின் ஒரு பகுதியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறையை "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று கண்டனம் செய்தார் ஜனாதிபதி.

English summary
Union Finance Minister Nirmala Sitharaman has tabled the Economic Survey 2020-21 in the Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X