டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா.. இத்தனை உறுப்புகளை பாதிக்கிறதா?... மருத்துவர்கள் ஷாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கி எட்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில்,. விஞ்ஞானிகள், கொரோனாவால் உடலின் பல்வேறு உறுப்புகளில் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது என்பது குறித்து இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கொரோனா தொற்று, மிக முக்கியமாக மேல் மற்றும் கீழ் சுவாசக்குழாய்களை பாதிக்கிறது என்று கருதப்பட்டது. பின்னர், இதயம் மற்றும் மூளையில் நோயின் வெளிப்பாடுகளை பாதிப்பது தெளிவாகத் தெரிந்தன.

ஆனால் இப்போது, ​​கணையமும் (செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை சுரக்கும் வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் உள்ள உறுப்பு) தொற்றுநோயால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ஆனால் இதனால் என்ன மாதிரியான விளைவுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கிறதா என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம் ஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம்

கணைய அழற்சி

கணைய அழற்சி

இதுபற்றி சர் கங்கா ராம் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறையின் துணைத் தலைவர் டாக்டர் அதுல் கக்கர் கூறும் போது, கடந்த ஒரு மாதத்தில் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து கொரோனா நோயாளிகளைக் கண்டோம் பொதுவாக, பித்தப்பை ஏற்படுவது அல்லது அதிகமாக மது அருந்துவது காரணமாக கணைய அழற்சி ஏற்படுவது இயல்பு. ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு கணைய அழற்சி ஏற்பட்டது எப்படி நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் நோயாளிகளுக்கு எந்த பழக்கமும் இல்லை. இதையடுத்து கொரோனாவால்தான் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்தோம்.

கணையத்தின் வீக்கம்

கணையத்தின் வீக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட கணைய அழற்சி நோயாளிகள் அனைவரும் 40 வயதுக்கு குறைவானவர்கள். வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி குறித்து அவர்கள் புகார் கூறினார்கள். வழக்கமாக, கணையத்தின் வீக்கம் குறைய பல வாரங்கள் ஆகும், ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் கணைய வீக்கம் வேகமாக குறைகிறது" இவ்வாறு அதுல் கக்கர் கூறினார்.

பல நோய்களுக்கு காரணம்

பல நோய்களுக்கு காரணம்

சீனாவிலிருந்து காஸ்ட்ரோஎன்டாலஜி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கோவிட் -19 நோயாளிகளுக்கு கணைய அழற்சி இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் இதுபற்றி கூறும் போது,. எட்டு மாதங்களுக்குப் பிறகும், கொரோனா இன்னும் ஒரு புதிரானதாக உள்ளது. நிமோனியா வைரஸ் நோயை போன்று தொடங்கிய இது பல அமைப்பு ரீதியான நோய்களில் வந்து நிற்கிறது என்றார்.

அதிகப்படியான பாதிப்பு

அதிகப்படியான பாதிப்பு

கொரோனாவால் நுரையீரல் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து ஒரு கருத்தரங்கில் பேசிய டாக்டர் நிஷ்சால், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 122 நோயாளிகளைப் கவனித்தாம். அவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் 53% நோயாளிகளுக்கு கூடுதல் நுரையீரல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தது அவர்களில், 70% பேர் மருத்துவமனையில் சேர்ந்த நேரத்தில் பலநோய்களை கொண்டிருந்தனர், "என்று அவர் கூறினார்.

Recommended Video

    Corona Vaccine : போட்டிபோடும் உலக நாடுகள்... எப்போதும் வரும் ?
    இறப்பு ஆபத்து அதிகம்

    இறப்பு ஆபத்து அதிகம்

    பிலியரி அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சரின் கொரோனாவின் தாக்கம் பற்றி கூறும் போது, வைரஸ் நோய் காரணமாக கல்லீரல் பாதிப்புடன் உள்ள பல நோயாளிகளை சந்தித்தேன். நாள்பட்ட கல்லீரல் நிலைமைகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளை நான் பார்த்தேன். இந்தியாவில் மிகவும் பொதுவாக கொழுப்பு கல்லீரல், நோய்த்தொற்று காரணமாக நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு அதிக ஆபத்து ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். நோய்த்தொற்றை சீராக குறைக்க நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் கூடுதலாக கல்லீரலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்று வலியுறுத்தினார்.

    English summary
    Now, it turns out that the pancreas — the organ behind the lower part of the stomach that secretes enzymes that aid in digestion — is also being affected by the Covid-19 infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X