திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்.. நிலைமை மம்தா கைமீறி போகுதே! தேர்தல் ஆணையம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கட்சியின் பெயரான அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் சின்னமான இரட்டை மலர் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. பல்வேறு தலைவர்கள் அக்கட்சியின் தலைவர் மம்தாவுக்கு எதிராக கலகம் செய்தனர். தனி அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மம்தா கையைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trinamool Congress

வரும் அக்டோபர் 6ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும். எந்தவொரு பிரிவும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியாது.

அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஒரு அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான மற்றொரு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரியிருந்தது.

இந்த விவகாரத்தில் எந்த அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை உள்ளது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், தேர்தல் ஆணையம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இரு அணிகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற சிக்கல் வந்தபோது இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான பெயர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், தங்களது தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் உடனான தொடர்பை அந்த பெயர்களில் குறிப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய இடைத்தேர்தல்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சின்னங்களின் பட்டியலில் இருந்து இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான சின்னங்களை தேர்வு கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+