டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே இயக்கும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல இடங்களில் ரயில் நிலையங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் சில ரயில்களை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. சில ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன.

Farmers protest: Many trains have been canceled by the Northern Railway

ரத்து செய்யப்படும் / திருப்பி விடப்படும் ரயில்கள்:

  • 09613 டிசம்பர் 2 முதல் அஜ்மீர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படும்
  • 09612 டிசம்பர் 3 ஆம் தேதி அமிர்தசரஸ்-அஜ்மீர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படும்.
  • 05211 திப்ருகார் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 3 முதல் ரத்து செய்யப்படும்.
  • 05212 டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் அமிர்தசரஸ்-திப்ருகார் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தஞ்சையிலும் கொந்தளித்த விவசாயிகள் - ரயில் நிலையம் முற்றுகை வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தஞ்சையிலும் கொந்தளித்த விவசாயிகள் - ரயில் நிலையம் முற்றுகை

  • 04998/04997 பதிண்டா-வாரணாசி-பதிண்டா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படும்.
  • 02715 அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 2 ஆம் தேதி நாண்டடில் தொடங்கி டெல்லியில் நிறுத்தப்படும்.
  • 04650/74 அமிர்தசரஸிலிருந்து டிசம்பர் 2 ஆம் தேதி புறப்படும் ஜெயநகர் எக்ஸ்பிரஸ் அமிர்தசரஸ்-டார்ன் தரன்-பியாஸ் வழியே திருப்பிவிடப்படும்.
Farmers protest: Many trains have been canceled by the Northern Railway

விவசாய அமைப்புகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த பலனையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Due to the farmers' protest, some trains operated by the Northern Railway have been canceled. Farmers have been protesting near railway stations in several places in Punjab and Haryana against the agriculture bill introduced by the central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X