காஷ்மீரில் இந்துக்களே இல்லாத நிலை உருவாகும் ஆபத்து .! மத்திய அரசை எச்சரிக்கும் ஃபரூக் அப்துல்லா
டெல்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 360 கடந்த 2019ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
இதையடுத்து அப்போது அங்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சில மாதங்கள் வரை அங்கு அதே நிலை தொடர்ந்த நிலையில், பாதுகாப்பு மெல்லக் குறைக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின்மையை தரும் PCODயால் அவதியா?.. சிகிச்சை முறைகளை சொல்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா

காஷ்மீர்
இதனிடையே அங்குள்ள உள்ள காஷ்மீர் பண்டிதர்கள் குறி வைத்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்தது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி எடுத்த தவறினால் காஷ்மீர் 100 சதவீதம் இந்துக்கள் இல்லாததாக மாறும் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.

இந்துக்கள் இல்லாத
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்யாவிட்டால், வரும் நாட்களில் காஷ்மீர் 100% இந்துக்கள் இல்லாததாக மாறக்கூடும். 1990களில் காஷ்மீரில் எந்த நிலை நிலவியதோ மீண்டும் அதே நிலைக்குக் காஷ்மீர் பண்டிதர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். நான் கொலைகள் நியாயப்படுத்தியும் பேசவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் பேசவில்லை.

மத்திய அரசு
ஆனால், மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு நிலைமை மோசமாகும். இதைத் தான் நான் செல்கிறேன். பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் காஷ்மீர் பண்டிதர்கள் கொலை மற்றும் சிறுபான்மை இந்துக்களின் வெளியேற்றம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

தாக்குதல்கள்
காஷ்மீரில் பண்டிதர்களை குறி வைத்து நடத்தப்படும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10 காஷ்மீரி பண்டித குடும்பங்கள் தெற்கு காஷ்மீரின் ஷோபியானில் இருந்து வெளியேறி உள்ளனர். காஷ்மீரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முதலே கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீரில் பண்டிதர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

வெளியேற்றம்
இருப்பினும், இந்தத் தகவலைக் காஷ்மீர் உள்ளூர் நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. காஷ்மீர் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இருந்த போதிலும், உண்மை நிலை அதற்கே நேர்மாறாக உள்ளது. காஷ்மீரில் வெளியேறுவதாகவும் இனிமேல் காஷ்மீர் திரும்பப் போவது இல்லை என்றும் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பூரன் கிரிஷன் பட் சகோதரர் அஸ்வனி குமார் பட் தெரிவித்து உள்ளார்.