டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 மாநிலங்களில்.. 91 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல்: இன்றுடன் முடிகிறது வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிக்கு நடைபெறும் முதல் கட்ட லோக் சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கும், தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை

 முதல் கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல்

ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் (17), உத்தரப்பிரதேசத்தில் (8), மகாராஷ்டிரா 7, உத்தர்காண்ட் (5), அஸ்ஸாம் (5), பீகார் (4), ஒடிசா (4) ஜம்மு மற்றும் காஷ்மீர் (2), அருணாச்சல பிரதேசம் (2), மேகாலயா 2, மேற்கு வங்கம் (2), சத்தீஸ்கர் (1), மணிப்பூர் (1), நாகலாந்து (1), திரிபுரா (1), சிக்கிம் (1), அந்தமான் நிக்கோபார் (1), லட்சத்தீவு (1) ஆகிய மாநிலங்களில் மொத்தம் 91 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

 சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

மக்களவை தேர்தலுடன் நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது, ஆந்திராவின் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அருணாச்சால பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஒடிசாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

 நட்சத்திர தொகுதிகள்

நட்சத்திர தொகுதிகள்

பீகாரின் அவுரங்காபாத், கயா, அஸ்ஸாமின் ஜோர்காட், தேஜ்பூர், சத்தீஸ்கரின் பாஸ்டர், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் ஜம்மு, மகாராஷ்டிராவின் நாக்பூர், வத்ரா, ராம்டெக், மேகலாயாவில் ஷில்லாங் துரா மிசோரமின் மிசோரம் ஆகிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

 ஆந்திரா விஐபிகள்

ஆந்திரா விஐபிகள்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 42 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலோடு மக்களவை தேர்தலும் சேர்ந்து நடக்கிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் அவர் குப்பம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

English summary
Last day of filing of nominations for the first phase of Lok Sabha elections today, 91 constituencies will go to polls in the first phase on April 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X