விமானத்தில் ஏறும் முன்பு காப்பீடு எடுக்க மறக்காதீங்க.. எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா 787-8 போயிங் விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் புறப்படுவது முதல் தரையில் விழுந்து வெடிப்பதை வரையிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நொடிகளில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்தது பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதி ஒன்றில் மேல் விழுந்ததில், இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான பயண காப்பீடு
இந்த நிலையில் விமான பயணம் மேற்கொள்பவர்கள் விபத்து காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விமான விபத்து காப்பீட்டின் மூலமாக விமான பயணத்தின் போது ஏதேனும் விபத்து நிகழ்ந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ இந்த இன்சூரன்ஸ் மிகப்பெரிய பலனை கொடுக்கும். ஏனென்றால் விமான பயணத்தின் போது எடுக்கப்படும் இன்சூரன்ஸ் 3 விஷயங்களை கவர் செய்யும்.
என்னென்ன வகை?
முதல் வகை விபத்து காப்பீடு. விமான பயணத்தின் போது பயணி ஒருவர் உயிரிழந்தால், அந்த விமான நிறுவனம் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அல்லது நாமினியாக சேர்க்கப்பட்டவருக்கு மொத்த தொகையையும் அளிக்கும். இதன் 2வது வகை மருத்துவ செலவுகள். அதாவது விமான விபத்து காரணமாக ஒரு பயணி காயம் அடைந்தால், மருத்துவமனை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கு பின்னான செலவுகளை இந்த காப்பீடு மூலம் பெற முடியும்.
இன்சூரன்ஸ் ஏன்?
3வது வகையாக விமான விபத்து காரணமாக உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உடல் உறுப்புகளை இழந்தாலோ அதன் சிகிச்சைக்கான செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பெற முடியும். விமான பயண காப்பீடு மூலமாக பயணிகளுக்கு உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்தால் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.
என்ன பலன்கள்?
ஒருவேளை விமான விபத்தில் பயணி உயிரிழந்தால் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பயணியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கப்படும். அதேபோல் விமான பயண காப்பீடு மிகவும் குறைவான விலையிலேயெ உள்ளது. ஒருநாளுக்கு ரூ.10 முதல் ரூ.5 ஆயிரம் வரை இன்சூரன்ஸ் இருக்கிறது. இது பயணத்தின் தொலைவு மற்றும் கட்டணம் தொடர்பானது.
எப்படி இன்சூரன்ஸ் எடுப்பது?
சாதாரணமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது, இன்சூரன்ஸ் தேவையா என்ற வாய்ப்பு அளிக்கப்படும். அதனை பெரும்பாலானோர் தேவையில்லை என்று நிராகரிப்பர். ஆனால் சிறிய தொகையை கட்டி விமான காப்பீடு பெறுவது நன்மையை அளிக்கும். அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வோர் விமான பயண காப்பீடு எடுத்து கொள்வது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications