அம்பேத்கர் விரும்பியதை நிறைவேற்றிய மோடி! இளையராஜாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹண்டே! பரபர அறிக்கை இதோ..!
டெல்லி : அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு எழுதிய அணிந்துரை சர்ச்சையான நிலையில், அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி எனவும், இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.

இசையமைப்பாளர் இளையராஜா
ஆனாலும், அவரது கருத்து அவ்வளவு சீக்கியம் ஓயவில்லை, பல அரசியல் தலைவர்கள் அதனை மையமாக வைத்து கருத்து தெரிவிக்க அது மீண்டும் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. அவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமெனவும், அதற்காக கடிதம் எழுதவும் தயார் எனக் கூறியிருந்தார்.

இளையராஜாவுக்கு ஆதரவு
இது நடந்து பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி எனவும், இளையராஜாவுக்கு ஆதரவாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இசைஞானி திரு. இளையராஜா அவர்கள் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை. 1949-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. திரு ஷேக் அப்பூல்லா அரசியல் சாசன வரைவுக் குழுத்தலைவர் Dr.அம்பேத்கர் அவர்களை அணுகினார்.

டாக்டர் அம்பேத்கர்
இச்செயலைக் கண்டித்து, Dr.அம்பேத்கர் அவர்கள் ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் "பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு நீங்கள தவறான போசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மிருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக அந்த மாநிலத்தில் எந்த தொழிற்சாலைகளும் வராது வேலை வாய்ப்புகள் அறவே நீங்கி விடும். இதனால் மக்களின் வாழ்க்கை பாழாகி விடும். இந்திய நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கின்ற நான், 30-வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுத்துகின்ற தேசதுரோக செய்லுக்கு உடந்தையாக இருக் மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
Recommended Video

திடீர் ஆதரவு
பிறகு, வேறு வழியில்லாமல், 17.04.1949 அன்று, இந்த சாசன பிரிவை திரு. N.G.அப்பங்காரால் சாசன சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆகவே 1949ஆம் ஆண்டில் Dr.அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு அம்பேத்கர் அவர்களை கொண்டாடுவதில் எந்த உரிமையும் தகுதியுமில்லை. மும்பை மாகாணத்தில் இருந்து சாசன சபைக்குள் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தது அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டிதர் நேரு அவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் BG கேர் அவர்களும் தான் பிறகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கிழக்கு வங்காளத்தின் ஜோகேந்திர மண்டல் அவளுடைய உதவியால்தான் சாசன சபை வர முடிந்தது" என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications