டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணிக்கும் பெண்கள்.. அடுத்து உங்களுக்கும்தான்.. கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கான இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது. பெண்கள் ஆர்வமுடன் பயணித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது "பெண்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலை என்பது நிரூபணம் ஆகும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதி என்.சி.ஆர், விமான நிலையம் மற்றும் டி.டி.சி (டெல்லி போக்குவரத்து கழகம்) மற்றும் கிளஸ்டர் ஸ்கீம் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் பிற சிறப்பு சேவைகளிலும் உள்ளது.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், "மகள்கள் கல்லூரிக்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், படிப்பைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களைப் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். இலவச பயண திட்டம் பெண்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மாணவர்கள்

மாணவர்கள்

மூத்த குடிமக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படலாம். ஒவ்வொரு அடியையும் ஒரே நேரத்தில் எடுத்துவைக்க முடியாது. ஆனாலும் நாங்கள் நிச்சயமாக அதைச் செய்வோம் (மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளை இலவசமாக்குதல்). பெண்களிடமிருந்து ஆரம்பித்துள்ளோம், இதன்பின்னர் எதிர்காலத்தில் மூத்த குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த பயணத்தை இலவசமாக்குவதை நாங்கள் நிச்சயமாக செய்வோம்.

என்ன தவறு உள்ளது

என்ன தவறு உள்ளது

எதிர்க்கட்சியினர் சிலர் இந்ததிட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள். கெஜ்ரிவால் எல்லாவற்றையும் இலவசமாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் கட்சிகள் குறுகிய கண்ணோட்டத்துடன் இதை பார்க்காமல் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அரசு செலவழிக்கும் பணத்தில் ஒரு ரூபாயில் 85 பைசா அவர்களை சென்றடைவதில்லை என ராஜீவ் காந்தியே கூறியிருந்தார். நான் மக்கள் பணத்தில் பள்ளிக்கட்டங்களை தரம் உயர்த்துகிறேன்.மருத்துவமனைகள், சாலைகள், பாதைகள், சாக்கடைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர செலவழித்து வருகிறேன். மீதமுள்ள பணத்தில் தண்ணீர், மின்சாரம், பேருந்து கட்டணம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு மானியமாக செலவு செய்கிறேன். இதை செய்வதில் என்ன தவறு இருக்கிறது.

பெண்கள் முன்னேற்றம்

பெண்கள் முன்னேற்றம்

அரசின் செயல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையெல்லாம் என்னால் செய்ய முடிவதற்கான காரணம் நான் படித்தவன். ஒரு அரசு அதிகாரியாக இருந்துள்ளேன். இந்த அமைப்பை நான் உள்ளே இருந்து பார்த்துள்ளேன். பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும்.

பெண்கள் முன்னேற்றம்

பெண்கள் முன்னேற்றம்

அரசின் செயல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையெல்லாம் என்னால் செய்ய முடிவதற்கான காரணம் நான் படித்தவன். ஒரு அரசு அதிகாரியாக இருந்துள்ளேன். இந்த அமைப்பை நான் உள்ளே இருந்து பார்த்துள்ளேன். பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும்.

மறுக்கப்படுகிறது

மறுக்கப்படுகிறது

பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான வாய்ப்புகள் பெரும்பாலும் மறுக்கப்படுகறது. இருப்பினும் அவர்கள் தங்களுக்கென்று சொந்தமான இடத்தை உருவாக்குகிறார்கள். விளையாட்டு அல்லது வானியல் அல்லது வணிகத் துறையில் இருந்தாலும், அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

குறைவான ஊதியம்

குறைவான ஊதியம்

டெல்லியின் மொத்த பணியாளர்களில், 11 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். மெட்ரோ மற்றும் பேருந்துகளை எடுக்கும் அனைத்து மக்களில், 30 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். பணியிடங்களில், பெண்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது" என்றார்.

திட்டம் கிடையாது

திட்டம் கிடையாது

இதனிடையே டெல்லி அரசாங்கத்தின் பெண்கள் ஊழியர்களுக்கும், ஏற்கனவே போக்குவரத்து உதவித்தொகை பெறும் உள்ளாட்சி அமைப்புகளில் பணி புரியும் பண்களக்கும் இலவச பஸ் பயணம் திட்டம் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Free bus rides for women on delhi from today. The Delhi CM Kejriwal said the scheme might be extended to senior citizens and students too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X