Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுடன் கூட்டு.. துரோகி இதயத்தில் விஸ்வாசம் இருக்காது.. குலாம் நபி ஆசாத்துக்கு தீவிரவாத மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், காஷ்மீரை மையமாக கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். இதுதொடர்பாக விரைவில் அவர் புதிய கட்சி துவங்க உள்ள நிலையில் ‛‛துரோகியின் இதயத்தில் விசுவாசம் இருக்காது'' எனக்கூறி குலாம் நபி ஆசாத்துக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப்பிடம் இருந்து மிரட்டல் சென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர் மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீர் முதல்வராகவும் இருந்தார். மேலும் கட்சி சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கும் குழுவில் அங்கம் வகித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அதிருப்தி அடைந்தார். 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை விமர்சனம் செய்தார். மேலும் கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என வெளிப்படையாக கூறினார்.

விலகிய குலாம் நபி ஆசாத்

விலகிய குலாம் நபி ஆசாத்

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இதனை அவர் ஏற்க மறுத்து ராஜினாமா செய்த நிலையில் கடந்த மாத இறுதியில் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பின்னடைவுக்கு ராகுல்காந்தியை அவர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் ராகுல்காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

 புதிய கட்சி துவங்கும் குலாம் நபி ஆசாத்

புதிய கட்சி துவங்கும் குலாம் நபி ஆசாத்

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை கைக்கழுவிய குலாம் நபி ஆசாத் விரைவில் பாஜகவில் சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் சமீபத்தில் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி, குலாம்நபி ஆசாத்தை பாராட்டி பேசியதையும், மார்ச் மாதத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டு விவாதம் நடந்தது. இதனை மறுத்த குலாம் நபி ஆசாத் சொந்த ஊரான ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை துவங்க உள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இதற்காக அவர் பல இடங்களில் பேரணி நடத்தி முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தான் லஷ்கர்-இ-தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் ஒருபகுதியாக உள்ள 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்'(டிஆர்எப்) சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கட்சி துவங்கும் முன்பு மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த அவர் திட்டமிட்டுள்ள நிலையில் தான் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது.

துரோகியின் இதயத்தில் விஸ்வாசமில்லை

துரோகியின் இதயத்தில் விஸ்வாசமில்லை

இதுதொடர்பாக வலைதள பக்கத்தில் கொலை மிரட்டல் தொடர்பான போஸ்டர்கள் பரப்பப்படுகின்றன. அந்த போஸ்டரில், ‛‛துரோகியின் இதயத்தில் விஸ்வாசம் என்பது இருக்காது. அரசியல் பச்சோந்தியான உங்களிடம் நம்பத்தகுந்தது என்பது தவறான செயல்கள் மட்டுமே. காஷ்மீரில் அரசியலில் குதிப்பது என்பது நன்கு திட்டமிட்ட ஒன்று. கட்சி மாறுவதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்'' என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ராகுல்பட் சம்பவத்தையும் நினைவுப்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காந்தியின் தேசம் இது

காந்தியின் தேசம் இது

இதன்மூலம் குலாம் நபி ஆசாத் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான், ‛‛நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அனைத்து தலைவர்களையும் சந்தித்தேன். இதில் உள்நோக்கம் கிடையாது. அஜித் தோவலை வாழ்நாளில் நேரில் சந்தித்து இல்லை. இது அல்லாவின் மீது சத்தியம். துப்பாக்கி எடுப்பது என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாம் காந்தியின் தேசத்தில் வாழ்கிறோம்'' என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+