கணினி முதல் சினிமா டிக்கெட் வரை.. ஜிஎஸ்டி வரியில் அதிரடி குறைப்பு.. 117 பொருட்களின் விலை மாற்றம்!
டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 117 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மொத்தம் 117 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நிறைய பொருட்களின் விலை ஏறியது, சில பொருட்களின் விலை குறைந்தது.
மொத்தம் 5%, 12%, 18%, 28% என்று நான்கு விதமான வெவ்வேறு வரிகள் இதில் விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை கண்காணிக்கவும், இது குறித்து ஆலோசிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

நேற்று நடந்தது
இந்த நிலையில் நேற்று இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டார்.

வரி குறைக்கப்பட்டது
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மொத்தம் 117 பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டது. 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல் ஜிஎஸ்டி வரிக்கான வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி நாள் மார்ச் 31-யில் இருந்து ஜூலை 1ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

எந்த பொருட்கள் எல்லாம்
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை இதனால் குறைந்துள்ளது. விமான கட்டணம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. சாக்லேட், பால் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது. பிரதமரின் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி நீக்கப்பட்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மீதான வரி 5% குறைந்துள்ளது.

குறைந்தது
அதேபோல் டிவி, கணினினு ஆகியவற்றின் வரி 28ல் இருந்து 18%ஆக குறைந்துள்ளது. பவர் பேங்க், வாகன டயர், இசைக்கருவிகள் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. அதேபோல் சினிமா டிக்கெட் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கும் அதிகமான சினிமா டிக்கெட் வரி 28% இருந்து 18% ஆக குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட் வரி 18% இருந்து 12% ஆக குறைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications