மோடி ஆட்சியையே கவிழ்க்க சதி செய்த சோனியா காந்தி.. குஜராத் கலவரம் குறித்து பாஜக பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2002 குஜராத் வன்முறையின்போது மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் ஆட்சியை கவிழ்க்க சோனியா காந்தி முயற்சித்ததாக பாஜக பரபர குற்றச்சாட்டை கூறியுள்ளது.

2002ல் குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இந்நிலையில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர்.

இதையடுத்து வகுப்புவாத மோதல் ஏற்பட்டது. ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.

டீஸ்டா செதல்வாட் கைது

டீஸ்டா செதல்வாட் கைது

இதுதொரடர்பாக சிறப்பு விசாரணை குழு (எஸ்டிஐ) விசாரித்தது. வகுப்புவாத மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்ஐடி, அப்போதைய முதல்வர் மோடி உள்பட 64 பேருக்கு கிளின்சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் குற்றமற்றவர்கள் என உச்சநீதிமன்றம் விடுவித்தது. இதற்கிடையே நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் உள்ளிட்டவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக எஸ்ஐடிக்கு தவறான தகவல்கள் வழங்கியதாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காங்கிரசுடன் தொடர்பு என வாதம்

காங்கிரசுடன் தொடர்பு என வாதம்

இந்நிலையில் டீஸ்டா செதல்வாட் ஜாமின்கோரி அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது எஸ்ஐடி சார்பில் , ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவக்கப்பட்டது. அதாவது குஜராத்தில் ஆட்சி கவிழ்க்க டீஸ்டா செதல்வாட் முயன்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அகமது படேல் அறிவுறுத்தலில் செயல்பட்டார். சட்டவிரோதமாக பணம் பெற்றுள்ளார். இதனால் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூலை 18 க்கு ஒத்திவைத்தது.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

இந்நிலையில் தான் இதுதொடர்பாக தற்போது காங்கிரஸ்-பாஜகவின் இடையே வார்த்தை போராக மாறியுள்ளது. இந்த எஸ்ஐடியானது உண்மையை வெளிப்படுத்தி உள்ளதாகவும், குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியை கவிழ்க்க சோனியாகாந்தி சதி செய்ததாகவும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று கூறியதாவது:

சோனியா காந்தி சதி

சோனியா காந்தி சதி

இந்த விவகாரத்தில் அகமது படேல் வெறும் பொம்மை தான். பின்னால் இருந்து அவரை இயக்கியது சோனியா காந்தி. அதாவது சோனியா காந்தி தனது தலைமை அரசியல் ஆலோசகராக இருந்த அகமது படேல் மூலம் குஜராத்தில் சீற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். இதன்மூலம் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி பற்றி அவதூறு பரப்ப முயற்சித்துள்ளார். இந்த முழு சதித்திட்டத்தின் சிற்பியே சோனியா காந்தி தான். டீஸ்டா செதல்வாட் சோனியா காந்தியின் பேச்சைக்கேட்டு நடந்ததால் தான் அவருக்கு 2007 ல் பதம்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாஜக மட்டும் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் அவரை உள்துறை அமைச்சராக கூட சோனியா காந்தி நியமனம் செய்திருப்பார்'' என கூறியுள்ளார்.

Recommended Video

    Vice President Election 2022 | BJP வேட்பாளர் யார்?
     காங்கிரஸ் மறுப்பு

    காங்கிரஸ் மறுப்பு

    குஜராத் எஸ்ஐடி சார்பில் அகமது படேல் மீதான இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது புதிதாகவும், போலியாகவும் உற்பத்தி செய்யப்பட்ட குற்றச்சாட்டு என புறம்தள்ளியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாஜக மற்றும் எஸ்ஐடியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் கூறுகையில், "எனது தந்தை மீதான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை. அவரது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது'' என வருத்தம் தெரிவித்து உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+