டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் சுழட்டி சுழட்டியடித்த புழுதி காற்று.. திணறிய மக்கள்.. பாகிஸ்தானின் புழுதிப்புயல் எதிரொலி

மும்பையின் பல்வேறு பகுதிகளில் புழுதி காற்று சுழன்றடித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று காலை முதலே மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் புழுதிகாற்று சுழட்டி சுழட்டி அடித்துள்ளது.. முக்கிய கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றுள்ளனர் வாகன ஓட்டிகள்.. அதேபோல காற்றின் தரமும் குறைந்து காணப்படுகிறது..!

சமீபகாலமாகவே டெல்லியில் காற்று மாசு படிந்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

டெல்லியில் இந்த அளவுக்கு காற்று மாசு படிவதற்கு காரணமே பாகிஸ்தான் தான் என்றும், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுதான், காற்றில் கலந்து டெல்லிக்கு கேடு விளைவித்து வருகிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்.. காணும் பொங்கலில் யாருமில்லாமல் காற்று வாங்கிய மெரினா கடற்கரை முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்.. காணும் பொங்கலில் யாருமில்லாமல் காற்று வாங்கிய மெரினா கடற்கரை

 சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

இந்த காரணம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வாதமும் நடந்து வருகிறது.. சமீபத்தில், இது தொடர்பான அமர்வில், உபி மாநிலம் சார்பாக வாதிடும்போது, டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு உபி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் காரணம் கிடையாது, உபியில் இருந்து காற்றோட்டம் டெல்லி நோக்கி வீசாது, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசடைந்த காற்றே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணம்" என்றார்..

 தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

இதைக்கேட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணாவும், "அப்படின்னா, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூட உத்தரவிட சொல்கிறீர்களா என்று கிண்டலாக அப்போதைய வாதத்தின்போதும் கேட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.. எனினும், டெல்லியில் மிகவும் ஆரோக்கியமற்ற முதல் அபாயமான அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதையடுத்து, காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

குஜராத்

குஜராத்

இந்நிலையில், மற்றொரு புது தகவல் வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் புழுதிப்புயல் எதிரொலியால், மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.. பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.. அதன்படி, நேற்று காலை முதலே இந்த புழுதிப்புயல் வீச ஆரம்பித்துவிட்டது.. மும்பை உள்பட புறநகர் பகுதியில் அதிகமாகவே வீசியது..

மும்பை

மும்பை

இதனால் மும்பையில் காற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது.. குறிப்பாக மலாடு, மஜ்காவ் போன்ற இடங்களில் காற்றின் தரகுறியீடு 300-க்கு மேல் அதிகமாக தாண்டி சென்றுவிட்டது.. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது.. எதிரே வண்டிகள் வருவது கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதி பறந்தது.. அதனால் வாகனங்களில் எல்லாரும் லைட்டை எரியவிட்டுதான் ஓட்டிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது..

கராச்சி

கராச்சி

சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும், மேலும் சில இடங்களில் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. இதைபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, கராச்சியில் வீசிய புழுதிப்புயலின் தாக்கத்தையும், பாதிப்பையும் மும்பையில் உணரமுடிந்தது... 12 மணி நேரம் வரையில் புயலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது... எனவே, மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும்.." என்றார்..

English summary
Heavy air pollution in Mumbai cities and air quality index levels are worse than Delhis right now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X