டெல்லியை புரட்டிய மழை.. பாலத்திற்கு கீழ் அப்படியே மூழ்கிய பேருந்து.. ஒருவர் பலி.. ஷாக்கிங் வீடியோ!
டெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றுக்கு கீழ் மழை வெள்ளத்தில் மூழ்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு தற்போது வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து உள்ளது.
அதிலும் இன்று அதிகாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்தது. டெல்லியில் பல இடங்களில் 7-9 செமீ மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.

பாலத்திற்கு கீழ்
இந்த நிலையில் டெல்லியில் மிண்டோ தரை பாலம் பகுதி வெள்ளத்தில் அப்படியே மூழ்கியது. அதீத மழை காரணமாக மிண்டோ சாலைக்குள் தண்ணீர் புகுந்து அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்திற்கு கீழ் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய வாகனங்கள் சிக்கிக் கொண்டது.

பேருந்து மாட்டிக்கொண்டது
இதையடுத்து அந்த தரை பாலத்தை கடக்க முயன்ற பேருந்து வெள்ளத்தில் மூழ்கியது. 20 பயணிகள் உடன் அந்த பேருந்து தண்ணீருக்குள் சென்று உள்ளது. எப்படியாவது பாலத்தை கடந்து விடலாம் என்று பேருந்து சென்றுள்ளது. ஆனால் செல்லும் வழியிலேயே பேருந்து பாதி வழியில் தண்ணீருக்குள் மூழ்கியது.

மீட்கப்பட்டது
இதையடுத்து அங்கு வேகமாக தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அருகே ஏணி வைத்து உள்ளே சென்று பயணிகள் மீட்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் மீட்கப்பட்டனர். இங்கு அடிக்கடி மழை வரும் போது இப்படி பேருந்துகள் சிக்குவது வழக்கம் ஆகியுள்ளது.

பலியானார்
இந்த பயணிகளை மீட்கும் போதுதான் அங்கு டாடா ஏஸ் வாகனத்தில் வந்த இன்னொரு நபர் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் பாலத்தை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்று இருக்கிறார். இவர் தண்ணீருக்குள் சிக்கி அங்கேயே பலியாகி உள்ளார். குந்தன் என்று அழைக்கப்படும் இவரின் உடல் இன்று தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications