Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பில்லை கேட்ட நோயாளி.. ரூ.1 லட்சத்தில் இருந்து சரிபாதியாக குறைந்த கட்டணம்! ஏமாந்துடாதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சில மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைக்குக் கூட அதிக தொகையை வசூலிப்பதாகப் பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். இதற்கிடையே இங்கு ஒரு நபர் தான் எடுத்த சிகிச்சைக்குப் பில்லை கேட்டுள்ளார். அந்த பில் கேட்டதன் மூலம் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் சுமார் ஒரு லட்சத்தில் இருந்து ரூ.57,000ஆக குறைந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்த காலத்தில் மருத்துவச் சிகிச்சைக்கான செலவு விண்ணை முட்டும் அளவுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது. அதேபோல சில மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து அதிகபட்ச தொகையை வாங்கவும் முயன்று வருகிறார்கள். அப்படி தான் இங்கு ஒரு நோயாளியிடம் அதிக தொகையை வாங்க முயன்றுள்ளனர். அவர் செய்த ஒரு காரியம் அவருக்கு ரூ.44,000ஐ சேமித்துள்ளது.

Hospital Billing scam A simple Itemized Breakdown request brings down bill from Rs 1 Lakh to Rs 57K

பில்லை மட்டும் கேட்டார்

அமெரிக்காவில் தான் ஒரு மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதாவது சிகிச்சைக்குப் பிறகு அவருக்குப் பில்லை கொடுத்துள்ளனர். அதில் ஒரு லட்சத்திற்கும் மேல் போட்டிருந்தனர். அவர் விரிவான பில், அதாவது itemised billஐ கேட்ட நிலையில், பில் தொகை குறைந்துள்ளது. அந்த விரிவான பில்லில் செய்யாத அறுவை சிகிச்சைக்கும் பணம் வசூலிக்கப்பட்டதை அவர் கண்டறிந்தார். விரிவான பில்லை மட்டும் வாங்கியதன் மூலம் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் சுமார் ஒரு லட்சத்தில் இருந்து ரூ.57,000ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பான தனது அனுபவத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த நோயாளி தனது சமூக வலைத்தள பக்கத்தில், "கடந்த ஜனவரியில் ஒரு பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். என்னிடம் இன்சூரன்ஸ் இருந்தது. ஆனால், அதையும் தாண்டி சுமார் 1 லட்சம் ரூபாய் ($1,100) பில் வந்தது. எப்படி இவ்வளவு பில் ஆனது என்பதைத் தெரிந்து கொள்ள விரிவான பில்லை கேட்டேன்.

கட்டணம் குறைந்தது

மருத்துவமனை அனுப்பிய ஆறு பக்க ஆவணத்தைக் கவனமாகப் பரிசோதித்தபோது, நான் செய்யாத ஒரு மருத்துவ ஆலோசனைக்கு ரூ. 31,430 வசூலிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தேன். மேலும் ஒரு சப்ளை கிட்-க்கான கட்டணம் இருமுறை சேர்க்கப்பட்டு இருந்தது. உடனடியாக நான் பில்லிங் துறைக்கு அழைத்தேன், சற்று சண்டையை எதிர்பார்த்தேன். ஆனால் அங்கிருந்த பெண் மிகவும் அமைதியாகப் பேசினார்கள். எனது புகாரை ஆய்வு செய்வதாகக் கூறினார். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின், இரண்டு கட்டணங்களும் நீக்கப்பட்டன. எனது பில் $1,100 இல் இருந்து $618 ஆகக் குறைந்தது" என்று நோயாளி விளக்கினார்.

விரிவான பில்

இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவே, எப்போதும் விரிவான பில்லைக் கேட்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இல்லையெனில், இந்த தவறுகள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், "பில்லிங் பிழைகள் மிகவும் பொதுவானவை.. மக்கள் சரிபார்க்க மாட்டார்கள் என்று மருத்துவமனைகள் நம்புகின்றன. வழக்கமாக மருத்துவமனைகள் சுருக்கமான பில்லை மட்டுமே தருவார்கள். முழுமையான விரிவான பில்லைக் கேட்டுப் பெறுங்கள். இதற்கு ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், உங்கள் பணத்தைச் சேமிக்க இது உதவும்" என அவர் பதிவிட்டிருந்தார்.

நெட்டிசன்கள்

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தாலும் கூட இந்தியச் சமூக வலைத்தளங்களிலும் இது டிரெண்டானது. இந்தியர்கள் பலரும் இதுபோன்ற சம்பவங்கள் இங்கும் நடப்பதாகப் பதிவிட்டுள்ளனர். சில மருத்துவமனைகள் இதுபோன்ற முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி அதிக கட்டணங்களை வசூலிப்பதாகச் சாடியுள்ளனர். மற்றொரு நபர், "எப்போதும் கூடுதல் கட்டணத்தையே போடுவார்கள். குறைவாகப் போட மாட்டார்கள். எனவே, இது வெறும் பிழை அல்ல. அது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்" என்றார். மற்றொரு நபர் விரிவான பில்லை கேட்டால் நிச்சயம் 20 சதவீதம் வரை சேமிக்கலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+