டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இனி எத்தனை மாநிலங்கள்.. எத்தனை யூனியன் பிரதேசங்கள்?

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இனி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ சதி திட்டம் தீட்டியுள்ளதால் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மெஹபூபா முஃப்தியும் ஒமர் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த மாநிலத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 How many States and Union Territories in India?

தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இன்றைய தினம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு- காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அவை யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுகிறது.

அதாவது சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு- காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் சட்டப்பேரவை அல்லாத லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மாநிலங்கள் 28-ஆகவும் யூனியன் பிரதேசங்கள் 9-ஆகவும் மாறியுள்ளன.

இனி இந்தியாவின் மாநிலங்கள்:

  1. ஆந்திரப்பிரதேசம்
  2. அருணாசல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பீகார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியாணா
  9. ஹிமாச்சல் பிரதேசம்
  10. ஜார்க்கண்ட்
  11. கர்நாடகம்
  12. கேரளம்
  13. மத்தியப் பிரதேசம்
  14. மகாராஷ்டிரம்
  15. மணிப்பூர்
  16. மேகாலயா
  17. மிசோரம்
  18. நாகாலாந்து
  19. ஒடிஸா
  20. பஞ்சாப்
  21. ராஜஸ்தான்
  22. சிக்கிம்
  23. தமிழ்நாடு
  24. தெலுங்கானா
  25. திரிபுரா
  26. உத்தர்காண்ட்
  27. உத்தரப்பிரதேசம்
  28. மேற்குவங்கம்

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள்

  1. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்
  2. சண்டீகர்
  3. தாதர் மற்றும் நாகர் ஹவேலி
  4. டாமன் மற்றும் டையு
  5. டெல்லி
  6. லட்சத்தீவுகள்
  7. புதுச்சேரி
  8. ஜம்மு- காஷ்மீர்
  9. லடாக்
English summary
How many States and Union Territories in India? Hereafter there are 27 states and 9 union territories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X