ரூ.10 கூட இல்லை.. ஒரு உணவு டெலிவரி ஏஜெண்டால் மாதம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்! ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் டெலிவரி ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர் தனக்குக் கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லி போன்ற டிராபிக் அதிகம் இருக்கும் நகரத்திலேயே அவருக்குக் கிடைக்கும் தொகை நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த காலத்தில் உணவு டெலிவரி என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. முன்பெல்லாம் உணவை பார்சல் வாங்க நாம் நேரில் சென்று வாங்குவது மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருக்கும்.

offbeat India

டெலிவரி செயலிகள்

ஆனால், உணவு டெலிவரி செயலிகள் வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. வீட்டில் இருந்தபடி பிடித்த உணவை ஆர்டர் செய்தால் சில நிமிடங்களில் அது வீடுகளுக்கே வந்துவிடும். மேலும், இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் பலருக்கு வேலையும் கிடைப்பதால் அனைத்து தரப்பினரும் இதை வரவேற்று வருகிறார்கள்.

இருப்பினும், பலருக்கும் டெலிவரி ஏஜெண்டுகளுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது தெரிவதில்லை. காலை முதல் இரவு வரை இவர்கள் பைக் ஓட்டி சம்பாதிப்பது எவ்வளவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கிடையே பிரபல ரெடிட் தளத்தில் யூசர் ஒருவர் தான் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10 கூட இல்லை

20 வயதே ஆன அந்த கல்லூரி மாணவர், டெல்லியில் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னராக பணிபுரிந்து வருகிறார். தனக்கு வரும் வருமாய் குறித்து அவர் ரெட்டிட் தளத்தில், "ஒரு ஆர்டருக்கு அடிப்படை ரேட் ரூ.20 கிடைக்கும். இது தவிர எவ்வளவு தூரம் ஓட்டுகிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு தொகை கிடைக்கும். 1.5 கிமீக்கு 25 ரூபாய்.. 3.2 கிமீ ஆர்டருக்கு 35 ரூபாய்.. 5.5 கிமீ ஆர்டருக்கு 65 ரூபாய் கிடைக்கும். எனவே கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ 7.5 கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் இது டெல்லி பகுதிகளில் மட்டுமே கிடைத்த தொகையாகும். அதேநேரம் மற்ற நகரங்களில் இதைவிட வருமானம் குறைவாகவே கிடைக்கும். அதாவது டெல்லி உட்பட நகர் பகுதிகளில் டெலிவரி தொகை சற்று அதிகமாக இருக்கும். அதேநேரம் 2ம் மற்றும் 3ம் கட்ட நகரங்களில் வருமானம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இளைஞர் சொல்வது என்ன

அந்த இளைஞர் மேலும் கூறுகையில், "நான் முதலில் பாக்கெட் மணிக்காகவே இதுபோல ஓட்ட தொடங்கினேன். பிறகு பெற்றோர் சுமையைக் குறைக்கக் கல்லூரி கட்டணத்தை நானே பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் டெலிவரி ஏஜெண்டாக ஓட்டுகிறேன். எனக்கு மாதம் ரூ.6000 வரை கிடைக்கிறது. இதுவே எனது கல்லூரி கட்டணத்தைச் செலுத்த உதவுகிறது" என் பதிவிட்டுள்ளார்.

மோசமான மற்றும் நல்ல கஸ்டமர்கள்

மேலும், சில நேரங்களில் கஸ்டமர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் எதிர்பாராத காரணங்களால் டெலிவரி சற்று தாமதம் ஆனாலும் கூட காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளால் திட்டுவதாகச் சாடியுள்ளார். அதேநேரம் சில அரிய நேரங்களில் அற்புதமான டெலிவரிகளும் அமையும் என்றும் அங்கு சந்திக்கும் நபர்கள் பாசிட்வாகவும் உற்சாகத்தைத் தருவதாகவும் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+