எந்தெந்த மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசி வழங்கப்படும்.. மத்திய அரசு வெளியிட்ட புது வழிகாட்டுதல்
டெல்லி: மாநிலங்களுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் மாநிலங்களுக்கு எப்படி தடுப்பூசிகளை வினியோகம் செய்யப் போகிறோம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மத்திய சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
இதன்படி மாநிலங்களின் மக்கள் தொகை, நோய் பரவல் விகிதம், தடுப்பூசியை வீணாக்காமல் எவ்வாறு அவர்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார்கள் என்ற விஷயம் உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்து அதற்கு ஏற்ப தடுப்பூசிகள் அளவு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தடுப்பூசிகளை வீணாக்குவது கண்டறியப்படும் போது அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் மருந்து அளவு குறைக்கப்படும் என்பது இந்த வழிகாட்டு நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சமாகும்.

வீணாக்க கூடாது
கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தடுப்பூசிகளை அதிகம் வீணாகாமல் பயன்படுத்துகின்றன. அதே நேரம் தமிழகத்தில் வீணாகும் விகிதம் மிக அதிகமாக இருந்தது தற்போது சற்று குறையத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு முக்கியத்துவம்
இந்த வழிகாட்டு நெறிமுறையில் மேலும் கூறியிருப்பதாவது- முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு இரண்டாவது தடுப்பூசி போட காத்திருப்பார்கள் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் தரப்படும்.

மக்கள் தொகை
18 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு எந்த பிரிவினருக்கும் முதலில் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். மாநிலங்களின் மக்கள்தொகை, நோய் பரவும் விகிதம், அவர்கள் தடுப்பூசியை கையாளும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி அளவுகள் இருக்கும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு தகவல்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்படி இதுவரை மாநிலங்களுக்கு மத்திய அரசு 240 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அதாவது 24 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது . இவற்றிற்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடதக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications