டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம்.. மத்திய அரசின் கொரோனா நிதியை பெறுவது எப்படி? பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் உடனடி கடன் வழங்கும் திட்டத்தை பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா மூலம் மத்திய அரசு வழங்கி வருகிறது.

4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே! 4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே!

பாரத பிரதமர் ஸ்வநிதி யோஜானா திட்டத்தில் இதுவரை 29 லட்சம் வியாபாரிகள் பயன்பெற்றுள்ள நிலையில், 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை இழந்தோருக்கு உதவி

பொருளாதாரத்தை இழந்தோருக்கு உதவி

பிரதான் மந்திரி பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் என்பது கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை இழந்த தெருவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கு மானியத்தில் கடன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை உத்தரவாதம் ஏதும் பெறாமல் வழங்கப்படுகிறது.

ஸ்வநிதி யோஜானா மூலம் கடன்உதவி

ஸ்வநிதி யோஜானா மூலம் கடன்உதவி

இந்தத் திட்டத்தின் முழுப் பெயர் பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் நிதி. அதாவது தெருவோர வியாபாரிகளுக்கு உடனடி கடன் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்குவதால் மைக்ரோ கிரடிட் என்றழைக்கப்படுகிறது. இந்த நிதியை சாலையோர கை வண்டி, தெரு வியாபாரிகள் போன்றவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தத் திட்டத்தின் மூலம் வியாபாரிகள் கடன் பெற விரும்பினால் உத்தரவாதம் ஏதும் அளிக்கத் தேவையில்லை. இந்த கடனை ஒரு வருடத்திற்குள் திரும்ப செலுத்தலாம். அதே சமயம் இந்தக் கடனுக்கு மானியமும் உண்டு. நீங்கள் திருப்பிச் செலுத்தும் கடனை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தினால் வருடத்திற்கு அதிகபட்சம் ஆயிரத்து 200 ரூபாய் வரை உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் பணம் செலுத்த வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனை தெரிந்தவரின் உதவியை நாடவேண்டும்

வட்டி கிடையாது

வட்டி கிடையாது

கடன் வாங்கிய வியாபாரி பணத்தை திரும்ப செலுத்த ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும். ஒருவேளை அந்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே செலுத்திவிட்டாலோ, அல்லது முறையாக தவணையை செலுத்திவிட்டாலோ 7 சதவீத பணம் மானியமாக கிடைக்கும். இதுகுறித்து உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவினால் இந்த திட்டம் குறித்து விரிவாக எடுத்து சொல்லுங்கள். மேலும் இந்த கடன் 50 லட்சம் பேருக்கு மட்டுமே என்றும், ஏற்கனவே 29,26,790 பேர் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவியுங்கள்.

யாருக்கு கடன் பெற தகுதி?

யாருக்கு கடன் பெற தகுதி?

இந்த கடனை வாங்கும் வியாபாரிகள் தங்களுடைய செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கவேண்டும். மேலும் 24 மார்ச் 2020ம் தேதிக்கு முன்னரே பணிபுரிந்துவரும் சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். பிரதான் மந்திரி ஸ்வநிதி திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

எங்கே அணுகுவது?

எங்கே அணுகுவது?

நகர்ப்புறம், பேரூராட்சி, கிராமங்களைச் சேர்ந்த தெருவோர வியாபாரிகள் இந்தக் கடனைப் பெறலாம். இந்தக் கடன் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் வியாபாரிகள் https://pmmodiyojana.in/svanidhi-yojana என்ற இணையதளத்தில் ஸ்வநிதி திட்டம் குறித்து அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கடன் குறித்த செயல்முறைகளை pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்து பயன்பெறலாம்.

English summary
The Union government is offering an instant loan scheme through Prime Minister Swanithi Yojana to help roadside traders who lost their economy during the Corona period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X