டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபத்து.. சர்ர்ரென விண்ணில் பாய்ந்த இந்திய ஜெட்கள்! ஃபாலோ பண்ணுங்க.. நடுவானில் திக் திக் சம்பவம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று ஈரானில் இருந்து சீனா நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை அதை எப்படி கையாண்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அந்த விமானம் சீனாவின் குகான்சூ நோக்கி சென்று கொண்டு இருந்தது. IRM081 விமானம் ஆகும் இது. காலை 9.10 மணிக்கு அந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.

இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து 10 நிமிடம் ஆன பின் விமானத்தில் இருந்து டெல்லி விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அதில்.. எங்கள் விமானத்தில் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

நாங்கள் அவசரமாக தரையிறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரியான தொலைவில் பின்தொடர்ந்தோம்.. ஈரான் விமானத்திற்கு அளித்த பாதுகாப்பு பற்றி இந்திய விமானப்படை பரபர சரியான தொலைவில் பின்தொடர்ந்தோம்.. ஈரான் விமானத்திற்கு அளித்த பாதுகாப்பு பற்றி இந்திய விமானப்படை பரபர

கோரிக்கை

கோரிக்கை

இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதும் முறைப்படி.. உடனே இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 300 பயணிகள் வரை இருந்துள்ளனர். இது ஏர்பஸ் 320 விமானம் ஆகும். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனே தரையிறங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளும் டெல்லியில் விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது மற்ற எமர்ஜென்சி லேண்டிங் போல கிடையாது. விமானம் தரையிறங்க சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மிரட்டல்

மிரட்டல்

அதாவது ஓடுதளத்தை தயார் செய்து மற்ற விமானங்கள் அனைத்தையும் தூரமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதோடு விமான நிலையத்தில் இருந்து தேவைப்பட்டால் மக்களை வெளியேற்ற வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். வெடிகுண்டு நிபுணர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த ஏற்பாடுகளை செய்யும் முன் விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு மேலே வந்துவிட்டது.

 தயார் நிலை

தயார் நிலை

இதனால் தொழில்நுட்ப ரீதியாக பிஸியான டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை டெல்லியில் இறக்க வேண்டாம் என்று தகவல் சென்றுள்ளது. இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்ட தகவலில் விமானத்தை ஜெய்ப்பூர் நோக்கி கொண்டு செல்லுங்கள். அல்லது சண்டிகர் விமான நிலையத்தில் தரையிறக்குங்கள் என்று கூறி உள்ளனர். அதோடு உடனே இந்திய விமானப்படை விமானங்களும் வானில் சீறிப்பாய்ந்து உள்ளன.

 தயார் நிலை

தயார் நிலை

அந்த குறிப்பிட்ட விமானத்தை குறிப்பிட்ட இடைவெளியில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வெடிகுண்டு இருப்பதாக கருதப்படும் ஒரு விமானம் திடீரென எங்காவது போய் மோதினால் பெரிய சிக்கல் ஆகும். இதனால் பாதுகாப்பிற்காக இந்திய விமானப்படை ஜெட்கள் பின்னாடியே பாலோ செய்து சென்றுள்ளன. இந்தியாவின் சுகோய் ரக விமானமான, Su-30 MKI விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பி உள்ளது. இப்படி இந்திய ஜெட்கள் பின்னாடியே சென்ற நிலையில், விமானிகள், விமானத்தை சீனாவிற்கே கொண்டு செல்வதாக கடைசியில் தெரிவித்தனர்.

சுகோய்

சுகோய்

ஜெய்ப்பூர், சண்டிகருக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் பெய்ஜிங்கிலேயே தரையிறங்கி விடுகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் விமானம் இந்திய வான் எல்லையில் இருந்து அடுத்த சில நிமிடங்களில் வெளியேறியது. சீனா வான் எல்லைக்குள் நுழைந்த பின்பே விமானத்தில் பாம் இல்லை என்பது தெரிய வந்தது. பாம் இருப்பதாக வந்த புகார் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பெய்ஜிங்கில் தரையிறங்கியது.

English summary
IAF Jets Scrambled: How India handled the China-bound Iranian Plane's SOS message.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X