நாட்டில் இப்போது தேர்தல் நடந்தாலும் பாஜக தானாம்.. தமிழகத்தில் எப்படி? டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
டெல்லி: நாட்டில் இன்று தேர்தல் நடைபெற்றாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் திமுக எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத்தெரிகிறது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக , ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைக்க தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அண்மையில் பாட்னாவில் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடின.

16 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட ஆலோசித்து வரும் நிலையில், பாஜக அதை முறியடிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலயில், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. கூட்டணிக் கணக்குகளில் அரசியல் கட்சிகள் தற்போதே இலைமறைக்காயாய் பேச ஆரம்பித்து விட்டன.
இப்படி நாளுக்கு நாள் தேர்தல் ஜூரம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி கிட்டும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு நடத்தியது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் நடத்தியுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரிடம் கேள்விகள் எழுப்பி இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* நாட்டில் தற்போதைய நிலையில், தேர்தல் நடந்தால் பாஜக 285 இடங்கள் முதல் 325 இடங்களில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கும்.
* காங்கிரஸ் கூட்டணிக்கு 150 இடங்களுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.
*தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 26 முதல் 32 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதில், திமுக மட்டும் 18-22 இடங்களில் வெல்லும். பாரதிய ஜனதா கூட்டணி 5 முதல் 9 இடங்களில் வெற்றி பெறும். பாஜகவுக்கு மட்டும் ஒரு இடம் கிடைக்கக் கூடும். கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு 2-4 இடங்கள் கிடைக்கும்.
* கர்நாடாகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாரதிய ஜனதா 15 முதல் 17 இடங்களிலும், காங்கிரஸ் 10 முதல் 12 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதி முதல் 2 தொகுதியில் வெற்றி பெறும்.
* குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும்.
* ஒட்டுமொத்தமாக பெறப்படும் வாக்கு சதவீதத்தில் பாரதிய ஜனதா கூட்டணி 38.08 சதவீதமும், காங்கிரஸ் 28.82 சதவீதமும் பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications