பஞ்சாப்பிற்கு நான் என்றால்.. மற்ற 4 மாநில தோல்விக்கு யார் காரணம்? காங்., மீது பாயும் அமரீந்தர் சிங்
டெல்லி: ‛‛காங்கிரஸ் கட்சி தோல்வியில் இருந்து ஒருபோதும் பாடம் கற்காது. பஞ்சாப்பில் தோற்க நான் காரணம் என்றால் உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்டில் வீழ்ச்சியடைய யார் காரணம்'' என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காட்டமாக கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அப்படியே தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளன.

ஆம்ஆத்மியின் மாபெரும் வெற்றி
அதன்படி பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் 59, எஸ்ஏடி 12, பாஜக 1 என தொகுதிகளை இழந்துள்ளன. பஞ்சாப் முதல்வராக ஆம்ஆத்மியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

காங்கிரஸ் முதல்வர் தோல்வி
இந்த தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இதேபோல் காங்கிரஸ் மாநில தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவும் தேர்தலில் மண்ணை கவ்வினார். மேலும் காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் ஆம்ஆத்மி கட்சியில் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தனர்.

அமரீந்தர் சிங் தான் காரணம்
பஞ்சாப் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று கூறுகையில், ‛‛பஞ்சாபில் மண்ணின் மைந்தன் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங்கின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான அலையை எங்களால் சமாளிக்க முடியவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்துக்காக ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர்" எனக்கூறினார். இதன்மூலம் காங்கிரஸ் தோல்விக்கு முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங் தான் காரணம் என அவர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

பாடம் கற்காத காங்கிரஸ்
இதுதொடர்பாக பஞ்சாப் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அந்த பதிவில், ‛‛காங்கிரஸ் தலைமை தோல்வியில் இருந்து ஒருபோதும் பாடம் கற்று கொள்ளாது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு யார் காரணம்? மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் பற்றி என்ன சொல்கிறார்கள்? இதற்கான பதில்கள் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் அவர்கள் அதை படிப்பதை தவிர்ப்பார்கள் என நினைக்கிறேன்'' என காட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video

யார் இந்த அமரீந்தர் சிங்
80 வயது நிரம்பிய அமரீந்தர் சிங் பஞ்சாப்பில் கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தார். இவர் டெல்லி பாஜக தலைவர்களுடன் மறைமுக உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமரீந்தர் சிங் விலக்கி வைக்கப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை துவங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கினார். இந்த தேர்தலில் பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் களமிறங்கிய அம்ரீந்தர் சிங் ஆம்ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோலியிடம் தோல்வியடைந்தார். இவர் உள்பட இவரது கட்சியினர் யாரும் வெற்றி பெறவில்லை. கூட்டணி என்ற முறையில் பாஜக மட்டும் 2 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications