லக்கிம்பூர் வன்முறை- மகன் காரணமா?ஆதாரம் காட்டுங்க--ராஜினாமா செய்யறேன்.. மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா
டெல்லி: 9 பேரை பலி கொண்ட உ.பி. லக்கிம்பூர் வன்முறைக்கு என் மகன்தான் காரணம் என ஆதாரத்தை காட்டினால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடங்கிய போராட்டம் உ.பி.யிலும் வெடித்தது. உ.பி.யின் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் சென்ற வாகனம் வழிமறிக்கப்பட்டு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது வேண்டும் என்றே போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனம் ஒன்று மோதி தள்ளியது.

லக்கிம்பூர் வன்முறையில் 9 பேர் பலி
இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த வாகனத்தை ஓட்டியது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா எனக் கூறப்பட்டது. இதனால் கொந்தளித்த விவசாயிகள், பாஜக தலைவர்களின் வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகினர்.

போர்க்களமான உ.பி.
நாடு முழுவதும் இந்த வன்முறை சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலமே போர்க்களமாகி உள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் உ.பி.யி.ல் போராடும் விவசாயிகளுடன் கை கோர்க்க முயற்சிக்கின்றனர். ஆனால் உ.பி. மாநில அரசு அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வருகிறது.

ஆதாரத்தை காட்டுங்க
இதனிடையே மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அஜிஸ் மிஸ்ரா, லக்கிம்பூர் வன்முறைக்கு என் மகன்தான் காரணம் என ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள். நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

சமூக விரோதிகளே காரணம்
மேலும் நாங்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்க காத்திருந்தோம். அப்போது சமூக விரோதிகள் சிலர்தான் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் எங்கள் ஓட்டுநர், பாஜக தொண்டர்கள் என பலரும் பலியாகி உள்ளனர். என் மகனுக்கு தொடர்பிருக்கிறது என ஆதாரத்தைக் காட்டுங்கள். அதன்பிறகு பதவியை நிச்சயம் ராஜினாமா செய்வேன் என்றார் அஜிஸ் மிஸ்ரா.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications