டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் சரியும் கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் தடுப்பூசி எண்ணிக்கை.. ஆனாலும் ஒரு சிக்கல்..?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,077 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவாகும். தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பது கவலையளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.

டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

 தமிழகத்தில் படுவேகமாக குறையும் கொரோனா.. தினசரி வைரஸ் பாதிப்பு 3600க்கு கீழ் சரிந்தது தமிழகத்தில் படுவேகமாக குறையும் கொரோனா.. தினசரி வைரஸ் பாதிப்பு 3600க்கு கீழ் சரிந்தது

கொரோனா 3வது அலை

கொரோனா 3வது அலை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 74,59,72,617 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,077 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவாகும். நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 67,084 பேரை விட சுமார் 10 ஆயிரம் குறைவாகும். அதே நேரத்தில் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 4,24,78,060 என்ற எண்ணிக்கையில் இருந்து 4,25,36,137 ஆக உயர்ந்து உள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

கொரோனா காரணமாக ஒரே நாளில் 1,50,407 பேர் குணமடைந்து உள்ளதாகவும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4,11,80,751ல் இருந்து 4,13,31,158 ஆக உயர்வடைந்து உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவுக்கு 657 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,06,520ல் இருந்து 5,07,177 ஆக உயர்ந்து உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தடுப்பூசி எண்ணிக்கை

தடுப்பூசி எண்ணிக்கை

1,71,75,86,173 டோஸ் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், 95,59,08,902 என்ற எண்ணிக்கையில் முதல் டோஸ் தடுப்பூசியும், 74,59,72,617 என்ற எண்ணிக்கையில் 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும் 1,57,04,654 பூஸ்டர் அதாவது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சதவீதம் பேர் இன்னும் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை பொதுமக்கள் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமுக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை நிறைவடையும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக மார்ச் மாதம் வரை பாதிப்பு எண்ணிக்கை சற்று உயரலாம் எனவும் பிரபல ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

English summary
In India, 58,077 people have been diagnosed with corona infection in the last 24 hours, 13 per cent less than yesterday. As the number of vaccines increases, medical experts say it is worrying that people are not following preventive measures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X