டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உக்ரைன் பேரழிவுக்கு ரஷ்யாவே பொறுப்பு.. இந்திய ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில்.. ஸ்காட் மாரிசன் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கும் இடையே இன்று 2அவது நாளாக மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புதிய முயற்சிகளுக்கான திட்டத்தை வகுக்க திங்கள்கிழமை இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு தொடங்கியது.

India-Australia virtual summit: PM Modi, Scott Morrison speak about Quad

இந்த உச்சி மாநாட்டில், ​​பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் வர்த்தகம், கனிம வளம், இடம்பெயர்வு, கல்வி ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அரசின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா ரூ.1,500 கோடி முதலீடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையே இன்று 2ஆவது நாளாக மெய் நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தோ பசிபிக் விவகாரம் தொடர்பாகவும் உக்ரைன் போர் தொடர்பாகவும் ஸ்காட் மாரிசன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா பகுதியில் தொடர்ந்து மாறும் சர்வதேச சூழல் குறித்தும் அதைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கை குறித்தும் மாரிசன் குறிப்பிட்டார்.

உக்ரைன் நிலைமை குறித்துப் பேசிய மாரிசன், "உக்ரைன் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு ரஷ்யா தான் பொறுப்பு ஏற்க வேண்டும். குவாட் உச்சி மாநாடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போர் குறித்து விவாதிக்க வாய்ப்பளித்தது. அதேபோல இந்தோ-பசிபிக் மீதான நிகழ்வுகள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு வாய்ப்பு அளித்துள்ளது" என்றார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த மெய்நிகர் உச்சி மாநாடு என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவை வடிவமைக்க உதவியது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை முன்னோக்கி நகர்த்த இந்தச் சந்திப்பு உதவும் என நம்புகிறேன்.

Recommended Video

    மிரண்டு போன மேற்குலகம்.. உளவாளிகளையே குழம்ப வைத்த Vladimir Putin

    வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு , கல்வி மற்றும் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளோம் என்பதைப் பெருமையாகச் சொல்லலாம்" என்றார்.

    English summary
    Prime Minister Narendra Modi and his Australian counterpart Scott Morrison has started today: Prime Minister Narendra Modi latest speech in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X