இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு - 66,254 பேர் ஒரே நாளில் மீண்டனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 66,254 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 66,254 பேர் குணமடைந்தனர். கொரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,19,77,238 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,92,092 ஆக சரிந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 40,826 குறைவு ஆகும்.

கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 25,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. மொத்த பாதிப்பு 4, 27,80,235 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 2.61 சதவிகிதத்தில் இருந்து 2.07 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.04 சதவிகிதத்தில் இருந்து 2.76 ஆகவும் குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.07 ஆக குறைந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 66,254 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,19,77, 238 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,655 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் 2,797, கர்நாடகாவில் 1,579, தமிழ்நாட்டில் 1,252, ராஜஸ்தானில் 1,506, மத்திய பிரதேசத்தில் 1,328 மிசோரத்தில் 1,119 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 319 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 492 பேர் இறந்துள்ளனர். மொத்தபலி எண்ணிக்கை 5,10,905 ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,92,092 ஆக சரிந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 40,826 குறைவு ஆகும். நாடு முழுவதும் நேற்று 37,86,806 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 174 கோடியே 64 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 75.68 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,54,893 மாதிரிகள் அடங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications