டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம இலக்கு இனி இதுதான்.. வளர்ந்த நாடுகளுடன் போட்டிக்கு தயாராகனும்'.. பிரதமர் மோடி அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: 5வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என்றும் 'வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட தயாராகனும்' என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சரக்குகளை தங்கு தடையின்றி கொண்டு செல்ல வழிவகுக்கும் புதிய தேசிய சரக்கு கொள்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

 கள்ளக்குறிச்சி மோடி போஸ்டர் கிழிப்பு! போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி பாஜகவினர் ரகளை! இருவர் கைது கள்ளக்குறிச்சி மோடி போஸ்டர் கிழிப்பு! போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி பாஜகவினர் ரகளை! இருவர் கைது

 வளர்ந்த நாடுகளுடன் போட்டி

வளர்ந்த நாடுகளுடன் போட்டி

இந்தியா உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. கொள்கைகள் என்பது வெறும் தொடக்கம் தான். கொள்கை.. பிளஸ்.. செயல்திறன் இந்த இரண்டும் வளர்ச்சிக்கு சரிசமமானது. நாம் வளரும் போது மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளுடன் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை நாம் வரவேற்க வேண்டும். வளர்ந்த நாடுகளிடம் இருந்து வரும் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

 நவீன போக்குவரத்து வசதிகள்

நவீன போக்குவரத்து வசதிகள்

இந்தியாவுக்கு இடர்பாடாக இருந்த மெதுவான நகர்வில் இருந்து மீண்டு சரக்குகளை அனைத்து வழிகளிலும் வேகமாக கொண்டு செல்வதே இந்த புதிய கொள்கையின் நோக்கம் ஆகும். லாஜிஸ்டிக்ஸ் துறையை வலுப்படுத்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். நவீன போக்குவரத்து வசதிகள் மூலம் இந்திய பொருள்கள் சர்வதேச சந்தைகளை எளிதாக அடையும். தொலைதூர பகுதிகளுக்கும் சரக்குகளை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை இந்த புதிய சரக்கு கொள்கைகள் போக்கும். ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ்

நடைமுறைகள் எளிதாக்கப்படும்

நடைமுறைகள் எளிதாக்கப்படும்

போக்குவரத்து துறை தொடர்பான அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் ULIP என்ற ஒரே தளத்தில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஏற்றுமதி தொடர்புடைய சிக்கலான நடைமுறைகள் எளிதாக்கப்படும். வணிக துறையிலும் இ-வே ரசீதிகளை செலுத்த வேண்டிய இடங்களில் தொலைத்தொடர்பு ஆய்வு முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரசீதுகளை ஆய்வு செய்ய வாடிக்கையாளர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சுங்கக்கட்டணத்தை செலுத்த கொண்டு வரப்பட்டு இருக்கும் பாஸ்டேக் முறையின் மூலம் போக்குவரத்து துறையின் திறன் அதிகரித்துள்ளது.

வலிமை மிக்க ஜனநாயக நாடு

வலிமை மிக்க ஜனநாயக நாடு

'வலிமை மிக்க ஜனநாயக நாடாக இந்தியா உருவாகி வருகிறது' என உலகளாவிய நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்திய நாட்டின் உறுதியையும், படிப்படியான முன்னேற்றத்தினையும் அவர்கள் பாராட்டுகின்றனர். தற்போது இந்தியா உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியினை பெருக்குவதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை முறை அறிவிக்கப்பட்டுள்ளதையும் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

English summary
Prime Minister Modi has said that India has become the 5th largest economy and is 'ready to compete with developed countries'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X