பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட மோசம்.. சர்வதேச பட்டினி குறியீடு ‘தவறான அளவீடு’.. கடுகடுத்த இந்தியா
டெல்லி: சர்வதேச பட்டினிக் குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை விட இந்தியா பின் தங்கியிருப்பது குறித்து விமர்சிக்கப்பட்ட நிலையில், இது தவறான அளவீடு என இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆண்டுதோறும் வெளியாகிறது.
அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான இந்த பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியா 101-வது இடத்தில் இருந்தது.

6 இடங்கள் பின் தங்கி
நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் மேலும் 6 இடங்கள் பின் தங்கி 107-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை 64-வது இடத்திலும் நேபாளம் 81-வது இடத்திலும் உள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கும் கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. சர்வதேச பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியது அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும் வழி வகுத்தது.

தவறான அளவீடு முறை
குறிப்பாக இந்தியா பின் தங்கியதை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில், சர்வதேச பட்டினி குறியீடு குறித்த அறிக்கை, பட்டினி குறித்த தவறான அளவீடு முறை என்று இந்தியா சாடியுள்ளது. மேலும், தீவிரமான செயல்முறை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.

ஆரோக்கியத்துடன் தொடர்பு உடையது
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த பட்டினி குறியீட்டை அளவிட பயன்படும் 4 காரணிகளில் மூன்று குழந்தைகளுடன் ஆரோக்கியத்துடன் தொடர்பு உடையது. இது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் பிரநிதித்துவமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது.

புறக்கணிக்கும் வகையில்..
ஊட்டசத்து இன்மை குறித்த விகிதாச்சார கணக்கீடு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. 3 ஆயிரம் பேரிடம் என்ற மிக சிறிய அளவிலான நபர்களிடம் இது நடந்துள்ளது. இந்த அறிக்கை கள நிலவரத்தோடு ஒட்டாமல் விலகி இருப்பதுடன் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்த முயற்சிகளை உள்நோக்கத்துடன் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications