டிரம்ப்பிற்கு பதிலடி.. அமெரிக்கா மீது வரிகளை விதிக்க இந்தியா அதிரடி முடிவு! இதை யாருமே எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்வேறு காரணங்களைச் சொல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அதன்படி தான் ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் 25% வரிகளை விதித்திருந்தது. இதற்கிடையே இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போது எடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு வரிகளை விதித்து வருகிறார். மீண்டும் அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லி டிரம்ப் இதுபோன்ற வரிகளை அறிவித்து வருகிறார். அதன்படியே கடந்த மாதம் அவர் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார்.

America Donald Trump Narendra Modi

அமெரிக்காவின் ஸ்டீல் வரி

சில காரணங்களால் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைக்க வேண்டி இருந்தது. இருப்பினும், மற்ற வரிகளை டிரம்ப் விதித்தே வந்தார். அதன்படியே ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25% வரிகள் விதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் கணிசமான அளவுக்கு ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதி நடக்கும் நிலையில், இது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்தியாவுக்கு இழப்பு

இதற்கிடையே பாதுகாப்பு நடவடிக்கை எனச் சொல்லி ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பதிலடியாக உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளின் கீழ் புதிய வரிகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரிகளால் $7.6 பில்லியன் மதிப்புள்ள ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதி பாதிக்கப்படும் என்றும் கூடுதலாக $1.91 பில்லியன் வரி செலுத்த வேண்டி உள்ளதால் இந்தியாவுக்கு இது இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாகவே கூடுதல் வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிரம்ப்

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு எடுத்தது. அப்போது உலக வர்த்தக அமைப்பின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்த இந்தியா கோரியது. அதற்குப் பதிலளித்த அமெரிக்கா தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காகவே வரிகள் விதிக்கப்பட்டதாகவும், ஆனால் இதைப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கருதக்கூடாது என விளக்கமளித்திருந்தது.

அமெரிக்கா

இந்த வரிகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை. டிரம்ப் முதல்முறையாக அமெரிக்காவின் அதிபராக இருந்த போது 2018 மார்ச் 8ம் தேதி தான் இந்த வரிகள் கொண்டு வரப்பட்டது. சில ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு முறையே 25 சதவீதம் மற்றும் 10 சதவீதம் வரிகள் அறிவிக்கப்பட்டன. அவை 2018 மார்ச் 23ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த வரிகள் ஜனவரி 2020இல் நீட்டிக்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, அமெரிக்கா மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எனச் சொல்லி, கடந்த மார்ச் 12ம் தேதி முதல் காலவரையின்றி இந்த 25% வரியை நீட்டிப்பதாக அறிவித்தது.

இந்தியா பதிலடி

அமெரிக்காவின் இந்த வரிகளுக்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்க இறக்குமதிக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பிற்கு இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு விதிக்கக் கூடுதல் வரிகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்தியா தனது கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. கடந்த மே 9ம் தேதி இந்தியாவின் கடிதம் உலக வர்த்தக அமைப்பிற்கு அனுப்பப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+